Header Ads



ஜப்பான் பொலிஸாரை ஏமாற்றும் இலங்கையர்கள்

ஜப்பான் என்பது உலகின் வளர்ச்சியான தொழில்நுட்ப நாடு என்பதோடு அங்கு மக்கள் கடுமையாக சட்டத்தை மதிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக மிகப்பெரிய தண்டப்பணம் அறவிடப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரிடம் இலங்கை பணத்தில் 25 லட்சம் ரூபாய் தண்டப்பணமாக அறிவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தண்டப்பணத்தை செலுத்தாமல் இலவசமாக செல்லும் முறையொன்றை ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானில் பிரபல விடுதிகளில் தனியாக மது அருந்தும் இலங்கையர்கள், மது அருந்திய பின்னர் தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருப்பதனை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனை பார்க்கும் ஜப்பான் நாட்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டவுடன் பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று அவர்களிடம் உரையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் அவர்களிடம் சென்று மிகவும் மரியாதையுடன், தாங்கள் யாருடன் இங்கு வந்தீர்கள் என்று வினவினால், நண்பர் ஒருவர் வருவதாக கூறினார், அவர் வரவில்லை என இலங்கையர்கள் கூறுவார்கள். இதன் போது அவர்களின் விலாசத்தை பெற்றுக் கொள்ளும் பொலிஸார் google mapஇல் விலாசத்தை உறுதி செய்துக் கொள்வார்கள். சர் தற்போது குடித்து வீட்டீர்களா என்றால் தங்களை வீட்டில் விட்டு விடுவோம் என கூறி அவரை பாதுகாப்பாக அழைத்துசென்று அவர்களின் வீட்டில் விடுவதோடு, குடிபோதையுடன் வாகனத்தை ஓட்டாதமைக்காக மிக்க நன்றி எனவும், இதன் பின்னர் அவ்வாறான நண்பர்களுடன் செல்ல வேண்டாம் எனவும் கூறிவிட்டு பொலிஸார் அவ்விடத்தை விட்டு செல்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையர்கள் மாதத்திற்கு இரண்டு முறை இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு வீர செயல் அல்ல எனவும், இது தொடர்பில் இலங்கையர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.