Header Ads



பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், ஸியா­ரங்களுக்கும் நிரந்­த­ர­ பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

-விடிவெள்ளி-

நாடெங்­கு­முள்ள இஸ்­லா­மிய மத மர­பு­ரிமைத் தலங்­க­ளான ஸியா­ரங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிரந்­த­ர­மான பாது­காப்­பினை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாது­காப்பு செய­லாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் மத மர­பு­ரிமை ஸ்தல­மான ஸியாரம் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் தாக்கி சிதைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அமைச்சர் ஹலீம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். 

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் காலி மாவட்­டத்­துக்குப் பொறுப்­பான கலா­சார உத்­தி­யோ­கத்தர் பி.ரி.ஹனூன் ஸியாரம் தாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான தக­வல்­களைத் திரட்­டி­யுள்ளார். கடந்த வியா­ழக்­கி­ழமை ஸியா­ரத்தை பரா­ம­ரிக்கும் காலி முஸ்லிம் கலா­சார நிலைய பணிப்­பா­ளர்­க­ளுடன் இவ்­வி­வ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்றும் நடை­பெற்­றது. கலா­சார உத்­தி­யோ­கத்­தரின் அறிக்கை பாது­காப்பு செய­லாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்­க­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

கடந்த வியா­ழக்­கி­ழமை காலி கோட்டை பள்­ளி­வா­சலில் காலி முஸ்லிம் கலா­சார நிலைய பணிப்­பா­ளர்­க­ளுடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் காலி மாவட்­டத்­துக்குப் பொறுப்­பான கலா­சார உத்­தி­யோ­கத்­தரும் பங்கு கொண்­டி­ருந்­தனர். 

ஸியாரம் தாக்­கப்­பட்ட சம்­பவம் காலி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் கலந்­து­ரை­யா­டலின் போது தெரி­விக்­கப்­பட்­டது. 

இப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் மற்றும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கு­மி­டையில் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து இப்­ப­கு­தியில் ஓர் அசா­தா­ரண நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட சதி என முஸ்லிம் கலா­சார நிலைய பணிப்­பா­ளர்கள் கருத்து தெரி­வித்­தனர். 

ஸியா­ரத்தை தரி­சிக்க இரா­ணுவம் பொது மக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை. ஸியா­ரத்தில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள மார்க்க அறி­ஞரின் பரம்­ப­ரை­யினர் இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்தால் அவர்­க­ளுக்கு இரா­ணுவம் அனு­மதி வழங்­கு­கி­றது. அத்­தோடு வரு­டாந்தம் இரு கந்­தூரி வைப­வங்­களை நடாத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­கி­றது எனும் விப­ரங்கள் கலந்­து­ரை­யா­டலின் போது தெரி­விக்­கப்­பட்­டது. 

ஸியாரம் 800 வருட வர­லாற்­றினைக் கொண்­ட­தெ­னவும் கடந்த 30 வரு­ட­கா­ல­மாக கந்­தூரி வைபவம் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

இதே­வேளை எதிர்­வரும் மே மாதம் 21 ஆம் திகதி கந்­தூரி வைப­வத்தை நடாத்­து­வ­தற்கு ஸியா­ரத்தை பரி­பா­லிக்கும் நிர்­வா­கிகள் தீர்­மா­னித்­துள்­ளனர். தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் முற்றுப் பெற்­றதன் பின்பு ஸியா­ரத்தை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு அனு­ம­தியும் கோரப்­பட்­டுள்­ளது. 

ஸியா­ரத்தில் வரு­டாந்தம் இடம்பெறும் இரு கந்தூரி வைபவங்களுக்கு இராணுவத்தினரும் உதவிகள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஸியாரத்தை இலகுவில் அடைவதற்கான வழி இராணுவ முகாம் வழியாகும். இராணுவ களஞ்சியசாலையையும் கடந்தே ஸியாரத்தை அடைய வேண்டியுள்ளது. 

ஸியாரத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குமாறு ஸியாரத்தை பரிபாலிப்பவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. Masjids it is ok to give protection what is that shrine ? what is the link between muslims and shrine. please blast all those shrines do not include those with muslims in sri lanka, who ever want to protect will sure go to hell insha allah

    ReplyDelete
  2. உண்மையான இஸ்லாத்தை பின்பற்றாத விளைவுகள் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும்,வருடத்தில் இரண்டு கந்தூரி கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் சுன்னா வழியில் இல்லாமல் வயிறு வழர்க்கும் சுயநலவாதிகளின் கேடுகெட்ட போக்கால் எல்லா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை

    ReplyDelete
  3. பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு ஓகே அனால் ஸியாரங்களுக்கு எதுக்கு பாதுகாப்பு??? கை கூப்பி வணங்கவா? இல்லை கந்தூரி கொடுக்கவா???

    ReplyDelete

Powered by Blogger.