Header Ads



அதிகாரிகளை மேடையிலிருந்து, விரட்டிய ஜனாதிபதி

-DC-

விவசாயம் செய்த விவசாயிகள் இல்லாமல், நச்சுத் தன்மை இல்லாத பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை ஜனாதிபதிக்குப் பரிமாற வந்த மகாவலி அதிகாரிகள் சிலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பி அனுப்பியுள்ளார்.

மகாவலி விவசாயிகளுடன் ஜனாதிபதி, திம்புலாகல, சொருவில முத்துமாரியம்மான் கோவிலில் நேர்ச்சையொன்றை நிறைவேற்ற நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். நேர்ச்சை நிகழ்வுகளுக்குப் பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகாவலி அதிகாரிகள் நச்சுத் தன்மை அற்ற அரிசி, மரக்கறி மற்றும் பழ வகைகள் அடங்கிய வட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு ஜனாதிபதியிடம் வருகை தந்துள்ளனர்.

அதனை ஜனாதிபதிக்கு வழங்க முற்பட்டபோது, ” இதனை விவசாயம் செய்த விவசாயிகள் எங்கே? ” என ஜனாதிபதி மகாவலி அதிகாரிகளிடம் வினவியுள்ளார். இதன்போது செய்வதறியாது முகத்தை முகத்தைப் பார்த்துக்கொண்ட மகாவலி அதிகாரிகளிடம் ” சென்று இதனை விவசாயம் செய்த விவசாயிகளையும் அழைத்து வாருங்கள், விவசாயிகள் இல்லாமல் என்னால் இதனைப் பெற்றுக்கொள்ள முடியாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மகாவலி அதிகாரிகள் மேடையிலிருந்து இறங்கி, விவசாயிகளைத் தேடிச்சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.