Header Ads



முஸ்லிம் காணி ஆக்­கி­ர­மிப்பு, புத்தர் சிலை விவ­காரம் - அர­சியல் தலை­மைகள் ‍மெளனம்

-விடிவெள்ளி-

இறக்­காமம் பிர­தேச சபைக்­குற்­பட்ட மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணியை இனவாதிகள் அப­க­ரிக்க முயற்­சிக்கும் விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் மெள­ன­மாக இருப்­ப­தாக பிர­தே­ச­வா­சி­களால் விசனம் தெரி­விக்­கப்­ப­ட­டுள்­ளது.

இவ்­வி­டயம் குறித்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் சமூக அமைப்­பு­களும் உட­ன­டி­யாக செயற்­பட்டு இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை கடந்த வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ளனர். சில மாதங்­க­ளுக்கு முன்னர் அப்பகு­தியில் புத்தர் சிலை ஒன்றை நிறு­வி­யி­ருந்த நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.

எனினும், ஸ்தலத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் முயற்சி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்­றனர்.

இச்சம்­பவம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தினர்.

செவ்­வாய்க்­கி­ழமை மாலை இம்  மலை­ய­டி­வா­ரத்­திற்குச் செல்­வ­தற்­கான வீதி­யையும் விகாரை அமைப்­ப­தற்­கான காணி­யி­னையும் கன­ரக வாக­னங்கள் மூல­மாக பௌத்த பிக்­குகள் முன்­னின்று செப்­ப­னிட்­டுள்­ளனர். இது தொடர்பில் காணிச் சொந்­தக்­காரர் ஒருவர் தமண பொலிஸில்  முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே கடந்த வியா­ழக்­கி­ழமை காலை மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை நிர்­மாணப் பணி­களை பிக்­குகள் முன்­னெ­டுத்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து  பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்கி மூலம் அற­வித்தல் விடுக்­கப்­பட்­ட­தற்­கி­ணங்க,  உட­ன­டி­யாக பிர­தேச மக்கள் மாயக்­கல்வி மலை­ய­டி­வா­ரத்­திற்கு சென்று பௌத்த தேரர்­க­ளிடம் தமது ஆட்­சே­ப­னையை முன்­வைத்­தனர்.

இந் நிலை­யி­லேயே அம்­பாறை பிராந்­திய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மனோஜ் ரண­கல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஹர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலைமையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

இவ்­வி­வ­காரம் குறித்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் எவ்­வித கரி­ச­னையும் செலுத்­து­வ­தாக இல்லை என பிர­தே­ச­வா­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றனர். அத்­துடன் இது குறித்து கட்சி பேத­மின்ற ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்­டோரின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லு­மாறும் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை, இறக்­காமம் மாயக்­கல்லி பகு­தியில் இடம்­பெற்று வந்த ­மு­று­கலை அடுத்து இப்­பி­ரதே­சத்தில் எவரும் நுழை­யா­த­வாறு  மே மாதம் 17 ஆம் திக­தி­வரை இடைக்­காலத் தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  அம்­பாறை மேல­திக மாவட்ட நீதி­மன்றம் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ளது.

பொலி­ஸாரின் உத்­த­ரவை மீறி இறக்­காமம் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பள்­ளியான் செய்­னு­லாப்தீன் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான காணியில் பௌத்த விகா­ரைக்­கான நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­ப­மான வேளையில் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­ருக்கும் இறக்­காமம் பிர­தேச மக்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற கடும் முறு­கலை அடுத்து பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு நிலைமை கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வரப்­பட்­டது.

இத­னை­ய­டுத்தே அம்­பாறை மாவட்ட மேல­திக நீதிவான் சசிகா லக்­மாலி தச­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை இப்­பி­ர­தே­சத்தில் எவரும் நுழை­யா­த­வாறு இடைக்­காலத் தடை உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

தற்­போது 24 மணி நேரமும் இப்­பி­ர­தே­சத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

மேலும், சமா­தான உற­வுகள் சீர்­கு­லையும் பட்­சத்தில் சட்­டத்தை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் பொலி­ஸா­ருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் பள்ளியான் செய்னுலாப்தீன், முஸ்தபா லெவ்வை, சுல்பிகார் , சரிபுத்தம்பி யூசுப், வண. அம்பேபிடிய சீலரத்ன தேரர் ஆகியோரை மே மாதம் 17 ஆம் திகதி அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதேவேளை, அப்பிரதேசத்தி லுள்ள அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், மாணிக்கமடு கோவில் நிர்வாகம் என்பன இணைந்து தங்களது எதிர்ப் பினை வெளிப்படுத்தியுள்ளனர்..

No comments

Powered by Blogger.