Header Ads



முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டுவீச்சு, குற்றவாளிகளை கைதுசெய்ய சிங்கள சமூகம் கோரிக்கை


கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை  கைது  செய்­யப்­ப­ட­வில்லை. 

போர்வை நகர்  வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு  தொடர்ந்தும்  பொலிஸ்  பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர்  ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து ஆய்­வு­களை  மேற்­கொண்­டனர். பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமெரா பதி­வுகள்  தெளி­வாக  இன்­மையால் அருகிலுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றின்  பதி­வு­களை பெற்றும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

சட்டம் ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்­னா­யக்க மற்றும் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் புத்­திக்க பத்­தி­ரன  ஆகியோர் இது­தொ­டர்­பாக பூரண விசா­ர­ணை­யொன்­றினை  நடத்தி  சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தும்படி பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்­ளனர். 

பிர­தேச  ஜம் இய்­யத்துல் உலமா  சபைக்­கிளை மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை முஸ்­லிம்­களை பொறுமை காக்கும்படியும் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி விட வேண்டாம் எனவும் கோரிக்கை  விடுத்­துள்­ளன.

 பெரும்­பான்மை  சமூகம்  இப்­ப­கு­தியில்  முஸ்­லிம்­க­ளுடன்  நல்­லு­ற­வினைப் பேணி வரு­வதால் வர்த்தக நிலைய தாக்குதல் சம்பவத்துடன்   தொடர்புபட்டவர்களை  கைது செய்யுமாறு  அச்சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது. 

 ARA.Fareel

No comments

Powered by Blogger.