Header Ads



ரணில் விதித்த தடை, எழுத்துமூலம் அனுமதி பெறவும் உத்தரவு


ஆண்டொன்றில் மூன்று தடவைக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த தடையை விதித்துள்ளார்.

கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுமக்கள் பிரதிநிதிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியை பலப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குழுக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் முடிந்தளவு கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று செயற்குழுக் கூட்டங்களில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் செயற்குழுவிலிருந்து நீக்கப்படுவர் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.