Header Ads



திரு­டிய இடத்தில் விட்டுச்சென்ற மோட்டார் சைக்­கிளை, எடுக்கவந்த திரு­டர்­க­ளை மின்­கம்­பத்தில் கட்­டிய மக்கள்

அநு­ரா­த­புரம், தலாவ, பிதுன்­கட பிர­தே­சத்தில் உள்ள வீட­மைப்பு திட்­ட­மொன்றின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள வீடு­க­ளுக்கு இடப்­பட்­டுள்ள எஸ்­பெஸ்டாஸ் கூரைத்­த­க­டு­களை கழற்றி திருடிச் செல்லும் கும்­ப­லொன்றைச் சேர்ந்த மூவரை கையும்­மெய்­யு­மாக பிடித்த பிர­தே­ச­வா­சிகள் அவர்­களை மரங்­களில் கட்டி வைத்­தி­ருந்து பின்னர் விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்­றுக்­காலை தலாவ பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைந்­துள்­ளனர். 

சில மாதங்­க­ளுக்கு முன்­பி­ருந்து தலாவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹிதோ­கம, பிதுன்­கட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள சந்­தி­ரா­ணி­கம வீட­மைப்பு திட்ட வீடுகள் சில­வற்றின் கூரைத்­த­க­டுகள் திரு­டப்­ப­டு­கின்­றமை தொடர்பில் பிர­தே­ச­வா­சிகள் அவ­தானம் செலுத்­தி­யி­ருந்த நிலையில் நேற்­று­முன்­தினம் இரவு வீடொன்­றி­லி­ருந்த 26 எஸ்பெஸ்டாஸ் கூரைத்­த­க­டு­களை சந்­தே­க­நபர்கள் திரு­டிச்­செல்ல முயற்­சித்த போது அவர்களை சுற்­றி­வ­ளைத்து பிடிப்­ப­தற்­காக பிர­தே­ச­வா­சிகள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

மேற்­படி வீட்­டி­லி­ருந்து தக­டு­களை ஏற்­றிச்­சென்ற லொறியின் டயர்­களின் தடத்­தினை பின்­தொ­டர்ந்து சென்ற பிர­தே­ச­வா­சிகள், குறித்த லொறி அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றுக்கு முன்­பாக தரித்­தி­ருந்து புறப்­பட்டு சென்­றுள்­ள­தனை ஊகித்­துக்­கொண்டு அவ்­வீட்­டா­ரிடம், எவ­ரேனும் லொறியில் வந்­த­னரா என வின­வி­யுள்­ளனர்.

அதன்­போது, இளை­ஞர்கள் நால்­வரும் வயோ­தி­ப­ரொ­ருவர் வந்­த­தா­கவும் அவர்­க­ளு­டைய மோட்டார் சைக்­கிளை தமது வீட்­டுக்கு முன்­பாக விட்டுச் சென்­றுள்­ள­துடன் அதனை பின்னர் வந்து எடுத்துச் செல்­வ­தா­கவும் அவர்கள் கூறிச் சென்­ற­தாக அவ்­வீட்டார் தெரி­வித்துள்ளனர்.

அதற்­க­மைய பிதுன்­கட கிரா­மத்தை சேர்ந்த 20க்கும் மேற்­பட்ட இளை­ஞர்கள் கூரைத்­த­க­டு­களை திரு­டிய சந்­தே­க­ந­பர்­களை கைது செய்­வ­தற்­காக மறை­வான பகு­தி­களில் பதுங்­கி­யி­ருந்த நிலையில்  சந்­தே­க­ந­பர்கள் மூவர் தாம்­விட்டுச் சென்ற மோட்டார் சைக்­கிளை எடுத்துச் செல்­வ­தற்­காக வந்­தி­ருந்த போது பதுங்­கி­யி­ருந்த இளை­ஞர்கள் அவர்­களை சுற்­றி­வ­ளைத்து வீதி­யோ­ரத்­தி­லி­ருந்த மின்­கம்­ப­மொன்றில் கட்­டி­வைத்து தலாவ பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்­ளனர்.

அதற்­க­மைய சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலிஸார் சந்­தேக நபர்­க­ளான 25 வயது இளை­ஞர்கள் இரு­வ­ரையும் 55 வய­தான நப­ரொ­ரு­வ­ரையும் கைது செய்­த­துடன் சந்­தேக நபர்­க­ளது மோட்­டார்­சைக்­கிள்கள் இரண்­டை­யும் கைப்­பற்­றி­யுள்­ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஜயசிறிபுரவிலுள்ள வீடொன்றிலிருந்து, களவாடப்பட்ட கூரைத்தகடுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.