Header Ads



அரபு இராச்சியத்தின் முதலாவது தலைநகரை ஷியாக்கள் கைப்பற்றினர்

(ஐ.எஸ்)  பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்டதாக நம்பப்படும் பண்டைய நகரான ஹட்ராவை ஈராக்கிய துணைப் படை கைப்பற்றியுள்ளது.

ஈராக் படையுடன் இணைந்து சண்டையிடும் ஷியாகளே ‘எதிரியுடனான கடும் மோதலுக்கு பின்’ யுனெஸ்கோ உலக மரபுரிமை பட்டியலில் உள்ள இடத்தை மீட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நகரில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்களை கொண்டு ஹட்ரா நகரில் இடம்பெற்றிருக்கும் சேதத்தை முழுமையாக கணிக்க முடியாதுள்ளது. இங்குள்ள இஸ்லாத்துக்கு முந்தைய சிலைகளை ஐ.எஸ் அழித்தும், களவாடியும் சேதத்தை ஏற்படுத்தியது.

பக்தாதில் இருந்து வட மேற்காக 290 கிலோமீற்றர் தூரத்திலும் மொசூலில் இருந்து தென் மேற்காக 110 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் ஹட்ரா நகரை 2014இல் ஐ.எஸ் ஆக்கிரமிக்கும் முன் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தலமாக இருந்தது. இந்த நகர் கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் பாதியன் பேரரசில் வர்த்தக மையமாகவும் முதல் அரபு இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்த பகுதியாகும்.

இந்த நகரை கைப்பற்றுவதற்கான தாக்குதலை ஷியாகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்ததோடு கடந்த புதனன்று அவர்கள் நகரின் தொல்பொருள் தலத்தை மீட்டுள்ளனர். தற்போது ஹட்ராவின் நவீன நகரை நோக்கி அவர்கள் முன்னேறி வருகின்றனர். மொசூல் நகரில் இருந்து ஐ.எஸ்ஸை அகற்றும் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஈராக்கியப் படை கடந்த நவம்பரில் பண்டைய நகரான நிம்ரூத்தை கைப்பற்றினர். எனினும் அங்குள்ள தொல்பொருள் பொக்கிசங்கள் அழிக்கப்பட்டிருந்தன. 

1 comment:

  1. -இங்குள்ள இஸ்லாத்துக்கு முந்தைய சிலைகைள- මෙම වාක්‍යය පැහැදිලි කරනවද
    දෙමළින් වුනත් කමක් නැත.

    ReplyDelete

Powered by Blogger.