Header Ads



அம்பாறை முஸ்­லிம்­களின் சனத்­தொகையை குறைக்க சதி - மயிர்க் கூச்­செ­றியும் சில உண்­மைகள் (அட்டவணை இணைப்பு)

ஒரு குறிப்­பிட்ட மக்கள் குழு­மத்தின் அல்­லது சமூ­கத்தின் சனத்­தொகை செறிவைக் குறைப்­ப­தற்கு ஒன்றில் இனச் சுத்­தி­க­ரிப்பை அல்­லது சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றத்தை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவர்­களின் நீண்ட கால அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாகும். அதன் மூலம் குறிப்­பிட்ட சமூ­கத்தின் நிலத்­தொ­டர்ச்­சியை இல்­லா­­தொ­ழித்து அவர்­க­ளுடன் பேரி­னத்தை கலப்­பதன் மூலம் சனத்­தொகையை ஐதாக்கி, அர­சியல் பலத்தை சிதைப்­பது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் உள்­நோக்­க­மாகும்.

இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர் உலகின் பல நாடு­களில் இந்தத் தந்­தி­ரத்தை ஏகா­தி­பத்­திய அர­சுகள் மிக இலாவ­க­மாகக் கையாண்­டுள்­ளன. அயர்­லாந்தில் பிரிட்டன் மேற்­கொண்ட குடி­யேற்­றங்­களும் போல்­கனில் சோவியத் யூனி­ய­னினால் பொஸ்­னியா போன்ற முஸ்லிம் நா­டு­களில் மேற்கொள்ளப்பட்ட சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றங்­களும் இதற்குத் தெளி­வான உதா­ர­ணங்கள்.

கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­பட்ட இலங்­கையில் சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய முதல் மூன்று தசாப்­தங்­க­ளிலும் இலங்கை பேரி­ன­வாத அர­சுகள் வடக்கு, கிழக்கில் இது­போன்ற குடி­யேற்­றத்­திட்­டங்­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வந்­துள்­ளன. அதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பலமும் பேரம் பேசும் ஆற்­றலும் மழுங்கடிக்­கப்­பட்­டது. நிலம் சார்ந்த பெரும் சமூக நெருக்­க­டி­யொன்­றுக்குள் அவர்­களைத் தள்­ளி­யது.

கிழக்கில் முஸ்­லிம்­களின் சமூக பலத்­தையும் அர­சியல் சக்­தி­யையும் ­ம­ழுங்கச் செய்­வதில் அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­களக் குடி­யே­ற்­றங்கள் முக்­கிய பங்­காற்­று­கின்­றன. கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளான திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை என்­ப­வற்றின் பரப்­ப­ளவில் பெரி­யது அம்­பாறை. இலங்­கையின் 25 மாவட்­டங்­களில் நான்­கா­வது இடத்தில் அது உள்­ளது. ஏழு மாவட்­டங்­களை அம்­பாறை மாவட்டம் எல்­லை­க­ளாகக் கொண்­டி­ருப்­பது அதன் பரந்­து­பட்ட நிலப்­ப­ரப்­புக்கும் சமச்­சீ­ரற்ற தன்­மைக்கும் தெளி­வான ஆதா­ர­மாகும்.

மொன­ரா­கலை, ஹம்­பாந்­தோட்டை, பொலன்­ன­றுவை, மாத்­தளை, கண்டி, பதுளை, மட்­டக்­க­ளப்பு ஆகிய ஏழு மாவட்­டங்­களை அது உள்­ள­டக்­கி­யுள்­ளது. திரு­கோ­ண­மலை 2226 சதுர கி.மீ பரப்­பையும், மட்­டக்­க­ளப்பு 2633 சதுர கி.மீ. பரப்­பையும் கொண்­டி­ருக்கும் அதே வேளை அம்­பா­றையின் பரப்பு 4415 சதுர கி.மீ. ஆகும்.

1940 களுக்குப் பின்னர் இலங்­கையில் அப்­போது நடை­மு­றை­யி­லி­ருந்த dro பிரி­வுகள் அர­சாங்க அதிபர் பிரி­வு­க­ளாக மாற்­றப்­பட்­டன.  முஸ்லிம் பிர­தேச சபைகள் பெரும்­பாலும் முஸ்லிம் குடி­யி­ருப்புப் பிரி­வு­க­ளாக மட்­டுமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. பெரும் பகுதி அர­சாங்க பூமியும் நீர் நிலை­களும் சிங்­க­ள-­, தமிழ் பெரும்­பான்மை கொண்ட பிர­தேச செய­லக நிர்­வா­கத்தின் கீழ்  கொண்டு வரப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு சட்­ட­பூர்­வ­மாக அவ்­வு­ரிமை மறுக்­கப்­பட்­டது.

நிர்­வாக அதி­கா­ரிகள் அனை­வரும் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்­த­தனால் தாம் விரும்பும் இடங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­றவும் தற்­து­ணிவு மூலம் அவர்­களுக்கு காணி உரி­மை­களை வழங்­கவும் சிங்கள அதி­கா­ரி­க­ளுக்கு முடி­யு­மாக இருந்­தன. மாறி மாறி வந்த அர­சாங்­கங்­களின் பிராந்­திய முக­வர்­க­ளாக செயற்­பட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு உள்ள காணி பகிர்வு தொடர்­பான தற்­று­ணிவு அதி­காரம் தென்­னி­லங்கைச் சிங்­கள மக்கள் அநேகர் வடக்கு, கிழக்கில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு ஏதுவாய் இருந்­துள்­ளது. இன்னும் இருந்து வரு­கின்­றது.

அம்­பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செய­லாளர் பிரி­வு­களில் வாழும் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையும் அதற்­கென உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள காணி­களின் பரப்­பையும் சிங்­கள அர­சாங்க அதிபர் பிரிவு­களில் வாழும் சனத்தொகை­யுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு, பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள மயிர்க் கூச்­செ­றியும் சில உண்­மைகள் நமக்கும் துலங்கும்.

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும்.

கிட்­டிய எதிர்­கா­லத்தில் இது ஒரு பாரிய நெரு­டிக்­க­டியை ஏற்­ப­டுத்­தா­வி­டினும் எதிர்­வரும் அரை நூற்­றாண்­டுக்குப் பின்­ன­ரேனும் அதன் மோச­மான விளை­வு­களை முஸ்லிம் சமூகம் அனு­ப­விக்க நேரும். கொழும்பு மாவட்டம் இதற்கு தெட்டத் தெளி­வான உதா­ர­ண­மாகும். சனத்­தொகை விதா­சா­ரத்­திற்கு ஏற்ப நிலம் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்­குள்ள அடிப்­படைப் பிரச்­சி­னை­யாகும்.

அம்­பாறை மாவட்­டத்தின் பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி­களின் அளவைக் கணிப்பிட்டால் காணிப் பகிர்வில் நிகழ்ந்­துள்ள பாரிய இனப்­பா­கு­பாட்­டையும் அநீ­தி­யையும் தெளி­வாகப் புரிந்துகொள்­ளலாம். இப்படி ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். இங்குள்ள அட்டவணையிலிருந்து இவ்வுண்மைமை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


-Rauff Zain விடிவெள்ளி

No comments

Powered by Blogger.