Header Ads



சவூதிக்கு பெண்கள் அனுப்பப்படுவது, தடுக்கப்பட வேண்டும் - ரஞ்சன்

2013 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை கொடுக்கப்பட்ட ரிசானா நாபிக் எனப்படும் பெண்ணிற்கு பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உதவித் தொகை வழங்கியுள்ளார்.

நேற்றைய -22- தினம் குறித்த பெண்ணின் குடும்பத்தார் பிரதியமைச்சரை சந்திக்க வந்தபோது தனிப்பட்ட முறையில் 25000 ஆயிரம் ரூபா நிதியினை வழங்கி வைத்துள்ளார்.

மேலும் 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரானி ராஜபக்ச ரிசானாவின் குடும்பத்தாருக்கு வீடு ஒன்றினை கட்டிக் கொடுத்துள்ளார்.

எனினும் இன்றும் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகின்றது. உங்களாலும் முடியும் உதவி செய்பவர்கள் செய்யலாம் எனவும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் “தான் தனது சொந்த பணத்தினை வழங்குவதால் தற்பெருமைக்காக இதனை செய்வதாக விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் தான் உதவி செய்வதாகவும் கூறியதோடு, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு வேலைக்காக பெண்கள் அனுப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சன் கூறியுள்ளார்.

ரிசானாவின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய விரும்புகின்றவர்கள் 0774352044 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்யுமாறு ரஞ்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 2013ஆம் ஆண்டு தொடக்கம் தமக்கு உதவிகளைச் செய்து வருவதாகவும்.,

அவருடைய உதவிகளால் தாம் வேதனைகளை மறந்து, மகிழ்ச்சியடைவதாகவும் ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.