Header Ads



முடிந்தால் ஆட்சியைக் கவிழுங்கள் - ரணில் ஜப்பான் சென்றுவிட்டார் - கபீர் ஹாஷிம்

அல­ரி­மா­ளி­கை­களை முற்­று­கை­யி­டு­வ­தனை விட்டு போயா தினம் வரும் வரை காத்­தி­ருக்­காமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று ஜப்பான் செல்­கின்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி சுதந்­திரக் கட்­சி­யு­டன இணைந்து முடி­யு­மானால் ஆட்­சியை கவிழ்த்து காட்ட வேண்டும்  என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு சவால் விடுத்தார்.

மஹந்­தவின் கும்­ப­லுக்கு நாம் பயந்­த­வர்­க­ளல்ல. கூட்டு எதி­ர­ணிக்கு பயந்தால் நாம் காலி­மு­கத்­தி­டலில் மே தின கூட்டம் நடத்­து­வ­தற்கு இட­ம­ளித்­தி­ருக்க மாட்டோம். மஹிந்­த­வினால் நாட்டின் ஆட்­சியை மாற்றி அமைக்க முடி­யாது.  அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் வின­விய போதே கேசரி அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தின கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. எமது மே தின கூட்­டத்­திற்கே இலட்ச கணக்­கான மக்கள் வருகை தரு­வார்கள். எனினும் கூட்டு எதி­ர­ணியின் மே தின கூட்­டத்தின் போது அலரி மாளிகை, ஜனா­தி­பதி மாளி­கை­களை முற்­று­கை­யிட போவ­தாக அறி­வித்­துள்­ளனர். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லுக்கு நாம் பயந்­த­வர்­க­ளல்ல. கூட்டு எதி­ர­ணிக்கு பயந்தால் நாம் காலி­மு­கத்­தி­டலில் மே தின கூட்டம் நடத்­து­வ­தற்கே இட­ம­ளித்­தி­ருக்க மாட்டோம். எனவே மே தின கூட்­டத்தை நடத்­தட்டும். அதன் பின்னர் நடப்­ப­தனை பார்ப்போம்.

மேலும் மே தின கூட்டம் நடத்­து­வ­தற்கு மாத்­தி­ரமே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அலரி மாளிகை, ஜனா­தி­பதி மாளி­கை­களை முடக்­கு­ம­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்டோம்.

அல­ரி­மா­ளி­கை­களை முற்­று­கை­யி­டு­வ­தனை விட்டு போயா தினம் வரும் வரை காத்­தி­ருக்­காமல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று ஜப்பான் செல்­கின்றார். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து முடி­யு­மானால் ஆட்­சியை கவிழ்த்து காட்ட வேண்டும்.

மஹிந்­த­வினால் நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்க முடியாது. நாட்டின் ஆட்சி மாறாது. ஐந்து வருடம் வரைக்கும் ஆட்சி நிலைத்து நிற்கும். இவர்களின் வாய் வார்த்தைகளினால் நாம் அச்சம் அடைய போவதில்லை.

1 comment:

Powered by Blogger.