Header Ads



கல்முனையில் விசேட நிகழ்வுகளில் சமைக்கப்படும் உணவுகளுக்கு, சுகாதார அதிகாரியின் அனுமதி வேண்டும்


கல்முனை பிராந்தியத்தில் நடைபெறும் விசேட நிகழ்வுகளில் சமைக்கப்படும் உணவுகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷிர் அஹமட் தெரிவித்துள்ளார். 

இறகாமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உணவு ஒவ்வாமையினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அம்பாறை - இறகாமம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உணவு ஒவ்வாமை பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகர சபையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஷிர் அஹமட் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குகின்றமை, வைத்தியசாலைகளிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு, வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவ வசதி குறைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இறகாமம் உணவு ஒவ்வாமை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி, விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அத்துடன், சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட தரப்பினர்களுடனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துரையாடல்களை நடாத்தி விடயங்களை ஆராய்ந்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.