Header Ads



யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவும், உண்மை நிலவரமும்..!


யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்திற்கான மீலாத் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இதற்கான பணிகளை டாக்டர் ரம்ஸி தலைமையிலான மீலாத் விழா  குழு மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சில், அதற்கான அமைச்சர் ஹலீமை 20.12.2016 அன்று சந்தித்து யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.  அதற்கான நியாயபூர்வமான காரணங்களையும் பட்டியல்படுத்தினர்.

தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறு முதன்முதலாக அமைச்சர் ஹலீமை நேரடியாக சந்தித்து, வலியுறுத்தியது டாக்டர் ரம்ஸி தலைமையிலான தரப்பினரே ஆகும். இதனை அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளரும், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவருமான பாஹிம் உறுதிப்படுத்தியும் இருந்தார்.

அதேவேளை சமகாலத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அமைச்சர் ஹலீமிடம் யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்துமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாண தேசிய மீலாத் விழா குழுவானது தகைமையுள்ள, தொழிசார் வல்லமையுடைய மற்றும் யாழ்ப்பாணத்திலும், அதற்கு வெளியேயும் கரங்கள் தூய்மையுடையவர்கள் என அடையாளம் கண்டவர்களை உள்வாங்கி ஒரு குழுவாக செயற்பட்டு, மீலாத் விழா ஏற்பாட்டு பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பிலான பல முக்கிய சந்திப்புகளை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா மூலம், தமது தாயகப் பிரதேசத்தை மேலும் மெருகூட்டும் நோக்குடன் செயற்படும் இந்த மீலாத் விழா குழுவானது யாழ்ப்பாணத்திலும், அதற்கு வெளியேயும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பூரண ஆதரவையும் பெற்று செயற்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு

டாக்டர் ரம்ஸி
யாழ்ப்பாண தேசிய மீலாத் விழா குழு (2017)


2 comments:

  1. நல்ல முயற்சி, ஆனால் மீலாத் விழா பித்தத் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்புமே?

    ReplyDelete
  2. இந்த மீலாத் விழா மூலம் எத்தனை வளர்ச்சிகளை கண்டாலும் இதன் அத்திவாரம் நபி வழிக்கு மாற்றமானது என்பது மட்டும் உண்மை,பார்ப்பதற்கு சிறப்பாகவும் அபிவிருத்தி போன்று காட்சியளித்தாலும் இதன் முடிவு இன்மைக்கும் முறுமைக்கும் நிரந்தர வெற்றியை கொடுக்காது.நபி காட்டித்தராத வழிகேடுதான் இந்த மீலாத்விழா என்பது,இதில் எவ்வளவு பெரும் புள்ளிகள் சம்மந்தப்பட்டாலும்,முழுக்க முழுக்க தக்வா அரவே இல்லாத பெருமை பெற்றுக் கொள்ளவும்,அரசியல் இலாபத்துக்குமான ஒரு வழிகேட்டுச்செயல்தான் இந்த பித்அத் விழா.

    ReplyDelete

Powered by Blogger.