Header Ads



தகைமை உள்ளவர்களை, அழைக்கிறது ஜப்பான்..!

அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இதனால் அந்த நாட்டில் இருக்கும் இலங்கை உட்பட வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தக தலைவர்கள் என அனைவருமே தாயகத்திற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டிப்போடும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பணிகளில் இருந்து வெளியேற்றப்படும் பிற நாட்டவர்களை (திறமையானவர்கள்) தங்களது நாட்டுக்குள் ஈர்க்க பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி வெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஜப்பான் நாட்டிற்குள் ஈர்க்கவும், நிரந்தரக் குடியுரிமை வழங்கும் புதிய விதிமுறைகளையும், விசா தொடர்பில் பல தளர்வுகளையும் ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்புதிய விதிமுறைகளில், நிரந்தரக் குடியுரிமைக்கான ஒரு விண்ணப்பம் அனைத்துத் தகுதிகளையும் பெற்றால் ஒரு வருடத்திற்குள் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

தகுதிகள் எட்டப்படாதவர்களுக்கு 10 வருடம் ஜப்பான் நாட்டில் வாழ்ந்தாலே போதும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் உலக நாடுகளில் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் தொடர்ந்து குடியுரிமை பிரச்சினைகளை மிக முக்கியமாக பார்க்கின்றது.

இந்த நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இலங்கை, இந்தியா போன்ற நாட்டவர்களுக்கு தற்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.