Header Ads



அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது - ரஷ்யா + ஈரான் எச்சரிப்பு

சிரியா மீது மேலும் வான் தாக்குதல்க ள் நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி தரப்படும் என்று ரஷ்யா மற்றும் ஈரான் இராணுவம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல் அஸாத் படையினருக்கு எதிரான தாக்குதல் மூலம் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்டி இருப்பதாக சிரிய அரசுக்கு ஆதரவான கூட்டுப்படை கட்டளை மையம் அறிக்கை ஒன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் உள்ளடங்கிய இந்த கட்டளை மையத்தின் அறிவிப்பில், “பதிலடி கொடுக்கும் எமது திறன் பற்றி அமெரிக்கா அறிந்துள்ளது. தற்போதில் இருந்து சிவப்பு கோட்டை தாண்டும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதலடி கொடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய விமானத் தளம் ஒன்றின் மீது அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை பல டஜன் கிரூஸ் ஏவுகணைகளை வீசியது. சிரிய அரச படையின் இரசாயன தாக்குதலில் பலரும் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்தே அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும் அமெரிக்காவின் இந்த தாக்குதல் அஸாத் அரசுக்கு ஆதரவான தரப்புகளின் கோபத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, சிரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை அனுமதிக்க முடியாதது என்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதிலிப்பில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் ரஷ்ய அரசு கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

2015 செப்டெம்பரில் ரஷ்யா தலையிடும் வரை சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அஸாத் அரசு பெரும் தோல்விகளை சந்தித்து வந்தது. எனினும் ரஷ்யாவின் தலையீட்டால் சிரிய அரசு தற்போது பலம்பெற்றிருப்பதோடு ரஷ்யா பிராந்தியத்தில் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

அதேபோன்று அஸாத் அரசுக்கு ஈரான் ஆதரவு கொண்ட ஷியா போராட்டக் குழுக்களும் உதவி வருகின்றன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் பங்களிப்பு சிரிய உள்நாட்டு யுத்தத்தில் தீர்க்கமான அம்சமாக மாறியுள்ளது.

அஸாத் ஆதரவு கூட்டுப்படை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வடக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவே அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான சிறப்புப் படையினர் சிரியாவுக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சிரியாவை நீண்ட காலத்திற்கு ஆக்கிரமிக்கும் ஒரு திட்டம் என்று அஸாத் ஆதரவு கூட்டுப்படை குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தளத்தின் மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல், சிரியாவை விடுவிக்கும் தமது படையை பலவீனப்படுத்தவில்லை என்று மேற்படி கூட்டுப்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதொல்லாஹ் அலி கமனெய் வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் மூலோபாய ரீதியிலான ஒரு தோல்வி என்றும் கடந்த கால தவறை மீண்டும் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

கிளர்ச்சியாளர் பகுதியில் சிரியாவின் இரசாயன தாக்குதலை தடுக்க ரஷ்யா தவறிவிட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிரியாவிடம் உள்ள இரசாயன அயுதங்களை அழிக்க ரஷ்யா இணங்கியுள்ளது. ஆனால் அந்த வாக்குறுதியில் தோல்வி அடைந்ததாலேயே இந்த இரசாயன தாக்குதலை நடத்த முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இத்தாலியில் நேற்று சந்திக்க இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திடம் இருந்து விலகி இருப்பதற்கு ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பது குறித்து ஆலோசிக்கவிருந்தது.

எனினும் இன்று செவ்வாய்க்கிழமை மொஸ்கோ செல்லும் டில்லர்ஸன் அங்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லவ்ரொவ்வை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்படிக்கையில் அதற்கான உதவியை வழங்க ரஷ்யா இணங்கி இருந்தது. கடந்த புதன்கிழமை கான் ஷெய்கூனில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை சிரிய அரசு மறுத்து வருவதோடு, சிரியாவிடம் இரசாயன ஆயுதம் இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அமெரிக்கா முன்வைக்கவில்லை என்று ரஷ்யா கூறுகிறது.

2 comments:

  1. Chemical Brothers ( Puttin and Komeni) supporting Chemical Killer Assad.
    They failed to warn and act against Assad for using chemical weapon on innocent kids and women.. But they are worrying about Air base attack.

    So What is their GOAL is exposed to Good People around the world.

    It is they who violated the international law by Using and Allowing Chemical weapon on Human.

    IF world fails to punish them..We Ask God to punish them for their inhuman act on innocents.

    ReplyDelete
  2. There's a honour among criminals ( Russia, Iran & Asad). Vladimir Putin and Iranian president must be hanged for abet crimes against humanity in Syria.

    ReplyDelete

Powered by Blogger.