Header Ads



சுவிட்சர்லாந்தில் சுன்னத்தின் போது, ஆண் உறுப்பை வெட்டிய மருத்துவர் விடுதலை

சுவிட்சர்லாந்து நாட்டில் சுன்னத்தின் போது சிறுவனின் ஆண் உறுப்பை  வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் வசித்து வந்த பெற்றோர் தங்களது 4 வயது சிறுவனுக்கு சிறுநீரக சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு யூலை மாதம் ஜெனிவாவில் உள்ள 59 வயதான மருத்துவரிடம் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்தபோது அதனை தந்தை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின்னர் ‘புகைப்படத்திற்கு நன்றாக உடலை காட்டவும்’ என தந்தை கூறியுள்ளார்.

தந்தையின் வார்த்தையை கேட்டு சிறுவன் அசைந்தபோது மருத்துவரின் கூர்மையான கத்தி சிறுவனின் ஆண் உறுப்பை  வெட்டி துண்டாக்கியுள்ளது.

இக்காட்சியை கண்டு பெற்றோர் மற்றும் மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கீழே கிடந்த ஆண் உறுப்பை  எடுத்து மீண்டும் இணைக்க மருத்துவர் முயற்சி செய்துள்ளார்.

பின்னர், வேறு வழியில்லாத காரணத்தினால் சிறுவனை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அலட்சயமாக சிகிச்சை மேற்கொண்டதாக கூறி மருத்துவர் மீது பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று ஜெனிவா நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, இதை விபத்தாக தான் பார்க்க முடியும். மருத்துவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. சிறுவனின் தந்தை தான் அக்கறை இல்லாமல் செயல்பட்டுள்ளார் என கண்டித்துள்ள நீதிபதி மருத்துவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

4 comments:

  1. தந்தையின் முட்டாள்தனத்தால் சிறுவன் எதிர்கால வாழ்க்கையையே இழக்கின்றான். இதன்அ காரணமாக அவன் ஒரு மாற்றுப் பாலினத்தவராக மாறினால் சமூகமும், மார்க்கமும் ஏற்றுக்கொள்ளுமா?

    ReplyDelete
    Replies
    1. என்ன கேள்வி இது?
      யாரிடம் கேள்வி கேட்டு வாதாடுகிறார்கள்?
      அழ்ழாஹ் விடமா ரஸூலிடமா?

      ஒரு முஸ்லிமின் கேள்வி இவ்வாறு இருக்க முடியாது.

      Delete
  2. Taking selfies are a kind of deseas. Father need to send to mental hospital. Even people taking selfies, while praying. In Haj,umrah, ect

    ReplyDelete

Powered by Blogger.