Header Ads



கந்தூரிச் சாப்பாடு நஞ்சான விவகாரம் - பாதிப்பு ஆயிரத்தை தொட்டது

அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.   இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

இந்நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 1,005 பேரில், பலர் சிகிச்சைக்குப் பின்னர் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.  

தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 comments:

  1. தீங்குகள் ஏற்படாமலும் நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவ்லியாவை தரிசிக்க போனவர்களுக்கு இவ்வாறு ஏற்படுவதை அவ்லியாவால் தடுக்க முடியாமல் போய்விட்டது.அவ்லியாக்கு அதிகாரம் இருந்திருந்தால் தடுக்க வேண்டும் ஆயிரம் பேர் பாதிப்படையும் அளவுக்கு ஏதோ ஒரு ஆபத்து நடக்க இருப்பதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம்.நம்பி வந்த பத்தர்களை இவ்வாறு பாராமுகமாக இருக்கும் ஒரு அவ்லியா நமக்கு தேவைதானா.அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் உங்களின் அழைப்புக்கு பதில் சொல்லமுடியாது.அழார்களுக்கொரு நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை,வயிற்றுப் புளப்புக்கு கந்தூரி நடத்தும் இவர்களை கடுமையாக விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் .(தயவு செய்து யாரும் என்னை வஹாபி என்று திட்டி விடாதீர்கள்)உண்மையை சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. Mr mustafa
      U have to clarify the even is this ksnthoori or not
      Who told you this is a kanthoori
      Why u misleading the people this not a Kanthoori just a get together in the mosque.
      Don't post wrong information and mislead the people.

      Delete
  2. Back in 1990s many were shot dead inside a mosque by the LTTE while they were praying Allah in Katankudy. Two years ago a crane crashed and many died in Makkah while performing Hajj. Will you question Allah for this? Don't be silly, Allah is there to decide who is right and who is wrong. It was an incident and a group of Muslims got affected, let's pray for Jannah to those who passed away and pray speedy recovery for those who are still suffering. This is the noble teaching of the beloved prophet (pbuh)

    ReplyDelete
  3. முஸ்தபா ஜவ்பர் அவர்களே, ஒரு விடயத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக அதில் தொடர்பு பட்டவர்களின் மனது பாதிக்கப்படும் படியாக பதிவுகள் இடுவது நல்ல ஒரு செயல் அல்ல.

    விபத்துக்களுக்கும், அங்கே வழிபடப் படுகின்றவர்களுக்கும் தொடர்பு இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹஜ்ஜின் பொழுது கிறேன் விழுந்தது, நெரிசலில் இன்னும் பலர் சஹீத் ஆனார்கள், அபப்டியானால் அவர்களை அல்லாஹ்வால் காப்பாற்ற முடியாமல் போனது என்று கொமன்ட் பண்ணினால் எப்படி இருக்கும்? நவூதுபில்லாஹ்.

    தயவு செய்து பொருத்தமாக கருத்து பதியுங்கள், அல்லாஹ் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete
  4. May Allah Bless brother Mustafa for this writing.

    We are sad that 1000 are affected by food poisoning... But We should also worry serious about these 1000 being affected by this Bida poisoning too.

    May Allah Guide All our Muslim Brothers and Sisters toward the way of Muhammed (sal) purely.

    ReplyDelete
  5. Mustafa Jawfer,

    நீங்கள் இஸ்லாத்திற்குள் எதோ ஒரு பிரிவை / கொள்கையை மட்டுமே சரி என்று நினைத்துக்கொண்டு, இன்னும் சதியா, விபத்தா என்று தெரியாத ஒரு சோக சம்பவத்தில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்று உங்களது இயக்கத்தின் / பிரிவின் கருத்தை திணிக்க முயல்வது அநாகரீகமான செயல்.

    இஸ்லாமிய வரலாற்றில் முகமது நபிக்கே பல சோதனைகள் வந்தன, அவரே கடுமையாக நோய்வாய்ப்பட்டு, துன்பம் அனுபவித்து பின்னர் இவ்வுலகை விட்டு பிரிந்தார். "முஹம்மது நபியையே அல்லாஹ் காப்பாற்றவில்லையே" என்று கேட்டால் முஸ்லிம்களின் ஈமான் என்ன ஆவது?

    கொதர்நாத் குகை உட்பட இந்துக் கோயில் முதல், கர்பலா, திருவிழா, என்று மட்டுமல்ல, எகிப்தில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு என்று மக்கள் கூடும் இடங்களில் ஆபத்துக்கள் நடக்கின்றன. எல்லா இடத்திலும் இறைவனை கேள்வி கேட்டல் ஒன்றுமே மிச்சம் இருக்காது, எல்லோரும் நாஸ்தீகர்களாக போக வேண்டியதுதான்.

    தயவு செய்து உங்களது இயக்க சண்டைகளுக்காக முஸ்லிம்களின் பிரச்சினையை கையில் எடுத்து விளையாட வேண்டாம், விளைவு விபரீதமாக மாறலாம்.

    ReplyDelete
  6. மனிதாபிமானத்தினையும், அல்லாஹ்வின் சோதனைகளையும், நாட்டத்தினையும் ஏற்றுக் கொண்ட புனித இஸ்லாத்தினை புறந்தள்ளி விட்டு அறபு மொழி பெயர்களையும், இயக்கங்களின் அடிவருடிகளாகவும், இஸ்லாம் தெரியும் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்தினைக் கொச்சைப்படுத்தும் போலி இஸ்லாமியர்களை புனித இஸ்லாத்திற்குள் நுளைவதற்கு அழைப்பு விடுக்கின்றோம். உங்களினால் இதுதான் இஸ்லாம் என்று தெரியாதவர்கள் இஸ்லாத்தினைப் பற்றி பிழையாக நினைத்தும் எண்ணியும் விடுகின்றனர். இஸ்லாம் அனர்த்தங்களின் போது மனிதாபிமானத்தினையும் நேசக் கரத்தினையும் வழங்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு துஆ செய்யுமாறும், பாவமன்னிப்பு கேட்குமாறும் தான் வலியுறுத்தி உள்ளது. இல்லாததை உள்ளபடி முகநூலிலிலோ வலைத் தளங்களிலோ சொல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. புனித இஸ்லாத்தின் பெயரினால் கருத்து சொல்வதை இவ்விடத்தில் வன்மையாக கண்டிக்கின்றோம். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லி விட்டுப் போங்கள் இஸ்லாத்தினையும் அதன் தூய்மையினையும் கொச்சைப்படுத்தாதீர்கள்

    ReplyDelete
  7. முஸ்தபா அவர்களே இவைகளுக்கு உங்கள் பதில் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.