April 19, 2017

'துருக்கியும், எர்துகானும் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது பாமரத்தனமானது'

-Dr Aqil Ahmad Sharifuddeen-

அர்துகானை ஒவ்வொருவரும் கற்பிதங்கொள்ளும் வகையும் அவர் மீது ஒவ்வொருவரும் கொள்ளும் எதிர்பார்ப்புக்களுமே அவர் மீதான வித்தியாசமான விமர்சனங்களை வீசி எறிவதற்குக் காரணமாயிற்று.

உண்மையில் துருக்கியும், அர்துகானும் நமது கற்பிதங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்.

திட்டமிடப்பட்ட நசுக்கல்களால் ஐரோப்பாவின் நோயாளியாக்கப்பட்டு ஈற்று நிலைப் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த தனது தேசத்தை பொருளாதார வல்லரசுகளோடு சமபல அந்தஸ்த்துடன் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு பரிகாரம் செய்த திறமை மிகும் வைத்தியர் அவர்.

தாம் திட்டமிட்டு சேதப்படுத்திய ஒரு தேசம் தமக்கு நிகராக மீண்டெழுவதனை எந்தவொரு வல்லரசும் வெறுமனே பார்த்துக்கொண்டு வாழாவிருந்திருக்காது என்பதனை நாமறிவோம். அவ்வாறாயின் துருக்கியின் மீண்டெழுதலில் அந்நாடு எத்துணை சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கும் என்பதனை நாம் ஊகித்துக் கொள்ளலாம். முகம் கொடுத்த சவால்களின் பரிமாணங்களையும் இம்மீள்பிறப்பின் வலிகளையும் அவர்களே நன்கறிந்தவர்கள்.

அத்தனையையும் தாங்கி, சகித்து, வியூகம் அமைத்து அத்தேசத்தை முன்னரங்கிற்கு அழைத்து வந்த அர்துகானை அம்மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கேன் மனத்தாங்கல்?

சிதைந்த போயிருந்த தன் தேசத்தை செப்பனிட்டு நிமிர்ந்த போது கடப்பாரையோடு கயவர் கூட்டம் கிளம்பியதைக் காண்கின்றான் தலைவன். வாளாவிருப்பானா அவன். தேசத்தைக் காக்க அதிகார ஆணை கேட்கின்றான். அது அவன் தேசமல்லவா, மக்கள் அவன் மக்களல்லவா, தாய் நாட்டை மீட்டெடுத்த தலைமகனிடம் அதனைக் காப்பதற்கும் ஆணை தந்தார்கள் அவர்கள். இதில் நமக்கேன் கடுப்பு!

நொய்ந்துபோன நோயாளியின் உடலில் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கும். அவனுக்குப் போஷணை அளிக்காமல், நம்பிக்கையூட்டாமல், புதிய வெளித் தொற்றுக்களில் இருந்து வேலியிடாமல் பூரண குணப்படுத்தலுக்கான பரிகாரம் சாத்தியப் படப்போவதில்லை. நாள்ப்பட்ட புண்ணை நாளிகைகளில் குணமாக்கச் சொன்னால் அது சாத்தியமும் இல்லை, அறிவுடைமையும் அல்ல.

இறுதியாக கிலாபா துடைக்கப் பட்ட பூமி துருக்கி என்பதுவும், அதில் அர்துக்கானின் நகர்வுகளும் கேட்பார் அற்ற அநாதையாக அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் உலகிற்கு நம்பிக்கை தருவதாக இருக்கலாம். அந்த நம்பிக்கையின் அடியொற்றி நம்முள் எழும் கற்பிதங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் துருக்கியும், அர்துகானும் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனமானதே.

நமது கற்பிதங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிதர்சனமாக்குவற்கு துருக்கி நமக்கு வஅதா கொடுத்திருக்கவில்லை. அவ்வாறே கொடுத்தாலும் அதனைச் சாத்தியப் படுத்துவதற்கு இன்னும் காததூரம் பயணிக்க வேண்டும்.

அது அவர்களது தேசம், அதனை வலுவூட்ட அவர்கள் பாதை அறிந்து பயணிக்கிறார்கள். இதில் நமக்கேன் பொல்லாப்பு. அவர்களது அடைவுகளில் சில வேளை நமக்கும் நன்மைகள் கிட்டலாம். எனவே அவர்களது முயற்சிகளை தவறான வியாக்கியானங்களால் கொச்சைப்படுத்தும் கைங்கர்யத்தை விடுத்து எதையாவது மாற்றங்களோடு சாதிக்க முடுகுதல் சிறந்தது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் எப்படிப் போனாலும் சஊதியும் ஈரானும் துருக்கியை சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

4 கருத்துரைகள்:

If Saudi continues its hatred to Turkey it would be its stupidity...world has changed a lot..
Saudi should know that..
Iran case is different it has 500 years of hatred since time of shafavid.

Erdogan is a beacon of light in darkness of Arab Islamic world a rising star n an embodiment of aspiration of our Umma .
Ys there r wolves from our so called despotic Muslim rulers plotting n colluding to devour Erdogan .
May Allah grant him more n more strenth n steadfastness in his endevour.

எங்கெல்லாம் இஸ்லாம் மீண்டெழ முனைகிறதோ அங்கெல்லாம் சவூதி அரேபிய மன்னர் குடும்பம் தம் இரும்புக் அந்த
கரங்கள் கொண்டு முளையை நசுக்க கிழம்பி விடும்.
இஸ்லாம் மேலோங்கிவிட்டால் மன்னர் குடும்பத்தின் சுகபோக வாழ்க்கைக்கு ஆப்பாகிவிடுமே...
எகிப்தின் எழுச்சியை கவிழ்த்து விடுவதில் அமெரிக்காவையும் முந்திக்கொண்டு சென்று இஸ்ரேலோடு கைகோர்த்து, எப்படி அங்கு இஸ்லாமிய அரசியல் எழுச்சியை கிள்ளி எறிந்தது என்பது நாம் அறிந்த விடயம்தான்.

Post a Comment