Header Ads



இலங்கையில் போலி, பேஸ்புக்குகள் பற்றி குவியும் முறைப்பாடுகள்..!

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

போலி முகப்புத்தகம் வைத்திருப்பவர்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகப்புத்தக பயனர்கள் தங்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் 850 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அரசாங்கமும் அதிகாரிகளும் நன்றாக நடந்தால் ஏன் போலி முக நூல் திறந்து கருத்தை சொல்கின்றார்கள்.நேரடியாக சொல்ல மக்கள் பயம் காரணமாக இருக்கலாம்.ஆனால் போலி முக நூல் பாவிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.கருத்து தெரிவிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு அதை உரிய முறையில் தேர்விப்பதுதான் ஜன நாயகம்.அடுத்து தனி நபர் விடயத்தில் மானத்தை வாங்குவதற்க்காக போலியாக செயல் படுபவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.