April 19, 2017

முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து விரட்ட இன­வாதக் குழுக்கள் நட­வ­டிக்­கை­ - அரசு மௌனம்

 -ARA.Fareel-

முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கை­களை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­ப­தற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்­றாகும். 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மீது அர­சாங்கம் மௌனித்து இருப்­பதே இதற்கு கார­ண­மாகும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இதற்­கெ­தி­ராகக் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார்.

கொட­பிட்­டிய, போர்வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் தனது அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­திற்கும் பாதுகாப்பு வழங்­கு­வ­தாகக் கூறியே நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. ஆனால் அர­சாங்­கத்தின் உறு­தி­மொ­ழிகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்டு விட்­டன.

போர்வை நகரில் மூன்று கடைகள் குண்டு வீசி எரிக்­கப்­பட்­டுள்­ளன. மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொட­ராது என்று மேடையில் குரல் கொடுத்­த­வர்கள், மஹிந்­தவை விமர்­சித்­த­வர்கள் இன்று முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­ப­டும்­போது பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அனை­வரும் கொள்கை முரண்­பா­டு­களைப் புறந்­தள்ளி தேசி­ய­பட்­டியல், பிராந்திய ரீதியிலான பிளவுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

இவங்கள் ரெண்டும் ஊமை கள்ளர்கள் .எல்லா விஷயங்களும் இவங்களுக்கு தெரியும் ஆனால் தெரியாத மாதிரி இருக்கின்றார்கள்.

jvp arasangam uruwanal muslimgaluku widiwu kalam

JVP இஸ்லாத்திற்கு முரணான, மற்ற மதங்களுக்கும் எதிரான நாத்தீக கொள்கை கொண்ட கம்யூனிசத்தை பின்பற்றும் கட்சி, இப்படிப் பட்ட கட்சியிடம் தான் முஸ்லிம்களுக்கு விடிவு என்று நம்புவது ஷிர்க் ஆகும்.

VoiceSrilanka ,

"Naam or naathigak katchi" enru JVP orupozum solliyazu
kidayaazu. Aanaal azu mazangalai vitrup pilaippu
nadaththum oru katchiyumalla.Avargal Unmaiyil naattai
nesikkiraargal enbazaal azai , ina , maza verupadinri
avargalaal seyya mudiyum enbazu oru aayvupoorvamaana
unmai. Matroru unmai ennavenraal , Mazangalai
nesippazaaga kaattikkondu , avatrai thangal arasiyal
laabaththukkaaga , vitruppilaippavargalthaan matrak
katchigal . Aemarupavan irukkumvarai aematrupavanum
irunthukondum valarnthukondumiruppaan VoiceSrilanka!

OOlayyidaththerindaalthaan avatrai naam NARIGAL enru
azhaikkirom . Illaiya AZWAR HAJIYAAR ? HAJIYAAR,eppo
Godapitiya Srilankavin thalainagaram aayitru ? Engu
nadanthaalum , nichchayamaaga azu oru inavaazak
kumbalin seyal , kattaayam thandikkappada vendum ,
neengal Aluthgama kumbalaith thandiththazaip
polalaamal ????

Mr Voice Srilanka
Then to believe in UNP and SLFP is not shirk.What happened is that Muslims overjoyed and over reacted to the victory of Racist president Srisena believing in Srisena, Not in god,will protect us.forgetting all the prayers and stop the Kunooth reciting.Now everything gone down and it look that incumbent president is more dangerous than Mahinda.He is Mahida's man and he decieved 6.2 million voters not only Muslims.He is angry because his party and his leader was defeated.So he wants to punish Muslims for that.He did not expect to win the election his candidacy is big conspiracy
and hatched by SLFP.So all the hard work done to defeat the Mahinda is gone in vain.Now MAhinda and Gothabaya ruling the country by proxy and he is the puppet.Ranil is the puppet.There is no good governance but same Government which had before 2015 january 08.

கம்யூனிஷ கொள்கை பற்றி கொஞ்சம் வாசியுங்கள். கிட்டத்தட்ட கம்யூனிஷம் ஒரு மதம்தான்.

Mr Duplicate VoiceSriLanka! பெயரைக்காப்பி அடித்தாலும் பரவாயில்லை ஆனால் இப்படி முட்டாள்தனமாக காமன்ட் பன்ன வேண்டாம்...
மற்ற கட்சிகள் இஸ்லாத்தை அரவனைக்கும் கட்சிகளா?
JVP கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியென்றால் அது அல்லாஹ்வை இனைவைக்கும் மத்த கட்சிகளைவிட சிறந்ததுதானே????
Shirk means associating partners with Allah!
JVP says There is no God. All we have to make them say something extra "there is no god but Allah "

Post a Comment