Header Ads



"கந்தூரி சாப்பாடு" புலனாய்வு விசாரணைக்கு கோரிக்கை, நோயின் தாக்கம் நீடிக்கிறது..!

இலங்கையில் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட சமைத்த உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறக்காமம், அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் 4-ஆவது நாளாக வைத்தியசாலைகளில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்று பேர் உயிரிழக்க காரணமான கந்தூரி உணவு விவகாரம்: இருவர் கைது
ஏற்கனவே சிகிச்சையின் பின் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர், நோயின் தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை என கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமையல்காரர்கள் , சமையல்க்கு உதவி புரிந்தவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4-ஆவது நாளாகவும் விசாரணைகள் தொடருகின்றன.

உணவு விஷமானதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் புலனாய்வு விசாரணை தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மாகாணத்திற்குரிய துனை போலிஸ் மா அதிபதியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். BBC

No comments

Powered by Blogger.