Header Ads



'ஜனாதிபதியாகும் கனவில், பசில் ராஜபக்ச இல்லை'

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை அடக்குவதன் மூலம் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முற்படுகின்றனர் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது அணியின் சார்பில் பசில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது.உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை.

இப்போதைய அரசமைப்பின்படி, மஹிந்தவால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. மஹிந்தவால் போட்டியிட முடியாத நிலை வரும்போது பஸிலால் இந்த நாட்டில் இருக்க முடியாது.

அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதனால் அவர் அப்போது நாட்டை விட்டுச் சென்றுவிடுவார்.

பசில் ஊழல்வாதியல்லர். அவர் எந்தவொரு ஊழலிலும் ஈடுபடவில்லை. அவர் சிறந்த அரசியல் செயற்பாட்டாளர். மஹிந்தவுக்குப் பக்கபலமாக இருப்பவர்.

அதனால்தான் அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அவரை அடக்குவதன் மூலம் மஹிந்தவின் செயற்பாட்டை முடக்குவதற்கு முற்படுகின்றனர்" என்றார்.

1 comment:

  1. மஹிந்த நாட்டின் ஜனாதிபதி இல்லை என்றால் பசில் நாட்டில் இருக்க முடியாது என்றால் இப்போ சிறைச்சாலையிலா இருக்கிறார் அல்லது நாட்டை விட்டு வெளியில் உள்ளாரா?

    ReplyDelete

Powered by Blogger.