Header Ads



"குப்பை மேடு சரிவு" சாகலவுக்கு எதிர்ப்பு, மரிக்காருக்கு ஊ கூச்சல்


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று பகல் 1.30 மணிவரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அங்கு சென்றுள்ளார்.

இதன்போது பிரதேச மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமைச்சருடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்காருக்கு ஊ கூச்சலிட்டு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“மரணத்தின் பின்னர் என்ன பார்க்க வந்தீர்கள்”... என கூறி அமைச்சருக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு எதிர்ப்பு வெளியிடும் அமைப்பு, பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது “இது இயற்கை மரணம் அல்ல எனவும், இது ஒரு கொலை”..... என குற்றம் சாட்டியுள்ளது.

“2011ஆம் ஆண்டு முதல் இந்த குப்பை மேட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும், எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் மற்றும் கடந்த அரசாங்கமே இந்த அனர்த்தத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். கொலை குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என இந்த குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி நீதிமன்றம் சென்ற சட்டதரணி நுவன் போபகே தெரிவி்த்துள்ளார்.

2 comments:

  1. மீத்தொட்டுமுல்ல குப்பைமேடு பற்றி மரிக்கார் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தார். ஆனால் அரசாங்கம் அதனை காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ஒரு வேலை மக்கள் குடியிருந்த காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவையாக இருந்தால் யரையும் குறை சொல்ல முடியாது. அதை அண்டி வாழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சொல்ல சொல்ல வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.