Header Ads



நான் மன்னிப்பு கோருகின்றேன் - ரஞ்சன்

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி குப்பைகளும் மீதொட்டமுல்லவிற்கே செல்கின்றன. எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அனர்த்ததிற்கு பொறுப்பு கூறவேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இந்த அனர்த்ததிற்கு ஒரு வகையில் நானும் பொறுப்பு கூறவேண்டும். ஆகையால் நான் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மீதொட்டமுல்ல அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்கின்றேன். குறிப்பாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். முன்னைய ஆட்சியும் தற்போதைய ஆட்சியும் இந்த அனர்த்ததிற்கு பொறுப்பு கூறவேண்டும். இது இயற்கை அனர்த்தம் அல்ல. இது ஒரு கொலையாகும்.

எனவே இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதிகள், பிரதமர்களும் பொறுப்பு கூற வேண்டும். குறிப்பாக மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதி குப்பைகளும் மீதொட்டமுல்லவிற்கே செல்கின்றன. ஆகவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு கூற வேண்டும். 

அத்துடன் இங்கு குப்பை கொட்டுவதற்கு சம்பந்தபட்ட அனைவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமிக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.