Header Ads



நிசாம் காரியப்பர், ஏ.எல்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் , ஏ.எல்.எம்.ஹிதாயத்துல்லா, உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அது ஒன்றுதான் இந்த சமூகத்துக்கு குறை,இப்படியே ஜனாதிபதி சட்டத்தரணியும் JP POSTடும் கொடுத்து இந்த சமூதாயத்தை ஏமாற்ற வேண்டியதுதான்

    ReplyDelete

Powered by Blogger.