Header Ads



கந்தூரி சாப்பாட்டு பாத்திரங்கள் கொழும்பு சென்றன - நெய், எண்ணெயில் சந்தேகம்

அம்பாறையில் பள்ளிவாசல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு அஜீரணமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன், குறித்த உணவுவகைகளை சமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் யாவும் பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒவ்வாமை காரணமாக இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600க்கும் அதிகமான மக்கள் இறக்காமம் வைத்தியசாலையிலும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்திருந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவரும் தற்போது மரணித்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த சம்பவத்தில் காலாவதியான நெய் பாவிக்கப்பட்டதனால் உணவு நஞ்சானதா? என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த உணவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளிலும் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் பாதிப்புக்குள்ளான மூன்று கர்ப்பிணித்தாய்மார்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலும் அறியவருகையில்,

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.