Header Ads



மீதொட்டமுல்ல அனர்த்தம், துக்க தினமொன்று பிரகடனம் செய்ய கோரிக்கை

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் துக்க தினமொன்று பிரகடனம் செய்ய வேண்டுமென தென்னிலங்கை பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் கோரியுள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்திற்கு சந்தர்ப்பவாத மற்றும் தோல்வியடைந்த அரசியல்வாதிகளே முழுக்க முழுக்க பொறுப்பு சொல்ல வேண்டும். அரசியல்வாதிகளின் வெட்கம் கெட்ட செயல்களினால் இந்த துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கம் இந்த அனர்த்தம் தொடர்பில் துக்க தினம் ஒன்றை பிரகடனம் செய்ய வேண்டும். இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் மிக மோசமான ஓர் சம்பவம், இது எமக்கு கசப்பான பாடங்களை புகட்டியுள்ளது.

துக்க தினம் ஒன்றை பிரகடனம் செய்வதன் மூலம் ஆட்சியாளர்கள் மக்களை தெளிவூட்ட முடியும். பல ஆண்டுகளாக மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினை தொடர்பில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் ஆட்சியாளர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

ஆட்சியாளர்கள் இதுவரையில் செய்த நகர அபிவிருத்தி என்ன? எமது நாட்டுக்கு குப்பைகளைக் கூட உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாது என உலகம் எள்ளி நகையாடும். இந்த அனைத்து காரணிகளின் ஊடாகவும் எமது ஆட்சியாளர்களின் மலினத்தன்மையே பறைசாற்றப்படுகின்றது என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.