Header Ads



சிரிய மக்கள் மீதான கொடுமையை, இலங்கை கண்டிக்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

இர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை அமெ­ரிக்க படை எல்லை மீறி மேற்­கொண்­டுள்ள­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

சிரி­யாவின் இட்லிப் பகு­தியில் அந்­நாட்டு அரச படை­யி­னரால்  மேற்­கொள்­ளப்­பட்ட இர­சா­யன வாயுத் தாக்­கு­தலில் அப்­பா­வி­யான பொது­மக்­களே பலி­யா­கினர். இதற்கு பதில் தாக்­கு­தலை அமெ­ரிக்­கப்­ப­டை­யினர் மேற்­கொண்­ட­திலும் பொது­மக்­களே உயி­ரி­ழந்­தனர். இதற்கு கண்­டனம் தெரி­வித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சிரி­யாவின் அப்­பாவிப் பொது­மக்கள் அநி­யா­ய­மாக கொன்று குவிக்­கப்­ப­டு­கின்­றனர். கடந்த வாரம் இட்லிப் பகு­தியில் அந்­நாட்டு படை­யினர் மேற்­கொண்ட இர­சா­யன வாயு தாக்­குதல் மிகவும் கொடூ­ர­மா­னதே. 

இத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கான 30 குழந்­தைகள் உள்­ளிட்ட 86 பேர் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் நூற்­றுக்­கணக்கானோர் மூச்சுத்திணறல் ஏற்­பட்டு கவ­லைக்­கி­ட­மான நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இது மிகவும் கொடூ­ர­மான தாக்­கு­த­லாகும். இந்த தாக்­குதல் குறித்து அரபு நாடுகள் மெளனம் காப்­பது கவ­லைக்­கு­ரி­யதே. சவூதி பாரா­ளு­மன்­றத்தில் கண்­டனத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டாலும் அவர்கள் அசாத் மற்றும் ரஷ்­யா­விற்கு எதிர்ப்புத் தெரி­வித்­து­விட்டு இர­சா­யன தாக்­கு­த­லுக்கு பதில் தாக்­குதல் வழங்­கிய அமெ­ரிக்­காவின் நட­வ­டிக்­கை­ககு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கின்­றனர்.  

இரண்டு தாக்­கு­தல்­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இவற்றால் மனி­த­நேயம் குழி­தோண்டிப் புதைக்­கப்­பட்­டுள்­ள­துடன், மிகக் கொடூ­ர­மான யுத்தக் குற்­றமும் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. அணி­சேரா கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டுள்ள இலங்கை அர­சாங்கம் இந்த தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்தக் கண்டனமும் வெளியிடவில்லை. எனவே அசாத்-ரஷ்ய கூட்டுப்படையினரின் தாக்குதலையும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் கண்டித்து இலங்கை அரசாங்கம் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.