Header Ads



முசலி முஸ்லிம்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வனபரிபாலன திணைக்ககளத்தினால்  கையகப்படுத்தப்பட்ட 2012/2017ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச்செய்யக்கோரி கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள்,  கொழும்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று மாலை (18-04-2017)முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தங்களுக்குத்தெரியாமல் 2012ம் ஆண்டு வனபரிபாலன திணைக்களத்துக்கு தமது காணிகளை சுவீகரித்துள்ளதாகவும், 2017ம் ஆண்டு கால அவகாசம் வழங்காமல் தமது பூர்வீக காணிகளை வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கி ஜனாதிபதியினால் செய்யப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச்செய்யக்கோரி ஊர் மக்கள் சார்பாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டத்தரணிகளான றுஸ்தி ஹபீப், மில்ஹான் லத்தீப், மற்றும் அலிகான் சரீப், பர்ஸான் ஹமீட் தௌபீக் மௌலவி  இணைப்பாளர் முஹிடீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. All Srilankan muslim & tamil should co operate in the valuable effert

    ReplyDelete
  2. All Srilankan muslim & tamil should co operate in the valuable effert

    ReplyDelete

Powered by Blogger.