Header Ads



சிரியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு, ட்ரம்ப் மகள் காரணமா..!?

சில நாள்களுக்கு முன்னர் சிரியா நாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரிய அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராசாயன குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனத் தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆஷாத் காரணம் என உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தத் தாக்குதலில் 80 பேர் பலியாகினர். இதில் 20 பெண்களும் 30 குழந்தைகளும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த ரசாயன தாக்குதலுக்குப் பின்னர், சிரியா மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல் நடத்தியது. குறைவான சேதம் ஏற்படும் வகையில் சிரியா விமானப் படை தளத்தின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு தாக்குதலுக்கும் உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் திடீர் தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலை அடுத்து வெளியான புகைப்படங்களைப் பார்த்து கடுங்கோபத்துடனும் மனம் உடைந்தும் இருக்கிறேன்' என்று இவான்கா ட்வீட் செய்திருந்தார்.

இதையடுத்து அமெரிக்கா சிரியாவின் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தையடுத்து இவான்கா, 'நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் பல இக்கட்டான முடிவுகளை எடுக்க வைக்கும். மனித குலத்துக்கு எதிராக நடத்தப்பட்டு இருக்கும் இந்த தாக்குதலுக்கு என் அப்பா எடுத்திருக்கும் நிலைப்பாடு பெருமை அளிக்கிறது' என்று ட்விட்டர் பதிவிட்டார். 

மேலும், சிரியாவில் ரசாயான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இவான்கா தனது அப்பா டொனால்ட் ட்ரம்பை, சிரியா அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி கூறினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

Powered by Blogger.