April 25, 2017

யார் சொல்வது உண்மை..? இமான் அகமதிற்கு நடந்தது எனன..??


உடல் எடையை குறைப்பாக எகிப்திலிருந்து இந்தியாவுக்கு வந்த இமான் அகமதின் சகோதரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

500 கிலோ எடை கொண்ட எகிப்திய பெண்ணான இமான் அகமது சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார்.

இங்கு மும்பை சைஃபி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது அவர் பாதியளவு உடல் எடை குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

ஆனால் அவரது சகோதரி, இது அனைத்துமே பொய், என் சகோதரி ஆபத்தான நிலையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், அறுவை சிகிச்சை மூலமாக என் சகோதரியின் உடல் எடை குறைந்துள்ளது என மருத்துவர்கள் கூறுவது முற்றிலும் பொய்.

கடந்த மார்ச்-ல் செய்த அறுவை சிகிச்சைக்கு பின் அவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வலது பகுதி செயலிழந்துவிட்டது.

மேலும், இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. மருத்துவமனையின் விளம்பரத்திற்காக மட்டுமே மருத்துவர்கள் உடல் எடையினை குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

மருந்துகளால் ஈமானின் கை, கால் நீல நிறமாக மாறிவிட்டது. மிக ஆபத்தான நிலையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவர், இமானின் அதிகளவு உடல் எடையானது அறுவை சிகிச்சையின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. அதிக உடல் எடையின் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் எழுந்து அமர முடியவில்லை.

அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது, விரைவில் குணமடைந்துவிடுவார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல சிரமங்களை மேற்கொண்டுள்ளோம்.

ஆனால் இமானின் சகோதரி வெளியிட்டுள்ள அவதூறு வீடியோ அதிக மனவருத்தினை ஏற்படுத்தியுள்ளது, இதற்காக அவர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் எகிப்து அழைத்து செல்ல அனுமதி வழங்கி விட்டதாகவும், பணப்பிரச்சனையின் காரணமாகவே அவரது சகோதரி இவ்வாறு பேசி வருவதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

7 கருத்துரைகள்:

What a graceless sister ! They should b grateful to Indian doctors for her treatment .
Sisi's mentality .

இவர்கள் சொல்வதை பார்த்தால் நம்ம நாட்டில் தொப்பியும், தாடியும், ஜுப்பாவும் வாயில் நிமிடத்திற்கு நூறு "சுபஹானல்லாஹ்வும்" சொல்லிக் கொண்டே இருக்கும் "குடு" ஹாஜிகளைத்தான் ஞாபகம் வருகிறது. டொக்டரும் முஸ்லிம், நோயாளியும் முஸ்லிம். சிகிச்சை வெற்றி என்று முதலில் நியூஸ் வந்ததும், டொக்டர் "எல்லாம் அல்லாஹ்வின் செயல்" என்று அல்லாஹ்வை புகழ்ந்தார், இப்பொழுது கதை வேற மாதிரி போகின்றது, அதற்கும் அல்லாஹ்வின் தலையில் பழியை போடுவார்களோ?

Shameem Mohideen,நஸீபு கெட்டவனே ஏன்டா உனக்கு அவ்வளவு இரக்கமா இந்த கூட்டத்துடன் அவ்வளவு பேரின் பாவச்சுமையையும் நொடிப்பொழுதில் நீ சுமந்து கொன்டாயே.அல்ஹம்துலில்லாஹ்.

Shameem எவர்கள் சொல்வதைப் பார்த்தால் ? உங்கள் கருத்து தெளிவில்லையே

Whatever the outcome " Alhamdulillah Ala kulli hal " in all circumstances.
Allah swa knows best. We never know which is benificial life or death.

" ஸமீன் " என்றால் அரபியில்
"மகா தடியன் " என்று அர்த்தம் .

பெயரைப்போல் அவருக்கு

மூளையிலும்
சதை வளர்ந்து

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் புத்தியை அடைத்து விட்டதோ???

Post a Comment