Header Ads



புதிய அரசாங்கத்தை உருவாக்க, முஸ்லிம்களின் பங்களிப்பு பாரியதாக இருந்தது - சம்பந்தன்

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து அவர்,

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்களிப்பை செய்தார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் பாரியதாக இருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் போக்கானது அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்த வரையில், அவர்களுடைய பேச்சைப்பொறுத்த வரையில் பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு மாற்றத்தை காண்கிறோம்.

இருந்தாலும் எமது மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும், காணாமல் போனோர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிடைக்கவேண்டும், அரசாங்கம் துரிதமாக செயற்படவேண்டும் என்பது அத்தியவசியமாக இருக்கிறது.

அது அவர்களின் கடமை. அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடகாலமாகி விட்டது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். புதிய அரசாங்கம் இரண்டு வருடமாக ஆட்சியில் இருக்கின்றது. எமது மக்கள் இன்னும் பொறுமையாக இருக்க முடியாது.

இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.