Header Ads



வாகன விபத்தில், மஸ்தான் Mp காயம்

-Dc-

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தின் டயரில் திடீர் எனக் காற்று வெளியாகியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்த் திசையில் வந்த இராணுவ கேப் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.