Header Ads



'முஸ்­லிம்­களிடம் அச்ச நிலையை உரு­வாக்­க, இன­வாதக் குழுக்கள் களம் இறங்­கி­யுள்­ளன'

முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும். பொலி­ஸாரும் உள­வுப்­பி­ரி­வி­னரும் தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உடன் கைது செய்ய வேண்டும் என வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

போர்வை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­டாமை பற்றி கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் 

'முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைத் தாக்கி அச்ச நிலையை உரு­வாக்­கு­வ­துடன் முஸ்­லிம்­களின் உடை­மை­க­ளையும் பொருட்­க­ளையும் கொள்­ளை­யி­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளுடன் சில இன­வாதக் குழுக்கள் களத்தில் இறங்­கி­யுள்­ளன.

அளுத்­கம வன்­செ­யலில் முஸ்­லிம்­களின் உடை­மை­களை சூறையா­டி­ய­வர்கள் மீண்டும் அவ்­வா­றான நிலை­மையை உரு­வாக்கி முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை கொள்­ளை­ய­டிக்க முயற்­சிக்­கின்­றனர்.இவ்­வா­றான முயற்­சி­களின் போது பொலி­ஸாரின் பங்­க­ளிப்பு முழு­மை­யாக வழங்­கப்­ப­டு­வ­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

இவ்­வா­றான சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­த­வி­டத்து வர்த்­தக நிலை­யங்­க­ள் தாக்­கப்­ப­டு­வதை நிறுத்­து­வ­தற்கு முடி­யாது. போர்வை நகர் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­குதல் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டாலே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாது தடுக்க முடியும் என்றார்.

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், காணி உரிமைகள், வர்த்தகம் என்பன கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரசாங்கம் விரைவில் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 ARA.Fareel

1 comment:

  1. Pepiliyana Fashion bug attackers were not punished.
    Panadura Nolimt was completely destroyed and none
    was caught.Aluthgama incident , will never be
    punished . Now , taking them for an encouragement,
    more and more are being carried out in popular and
    unpopular locations while the same Muslim leaders
    who were watching helplessly under Mahinda are now
    watching under My3 and Ranil ! Remember how
    Meethotumulla started and how it is being sorted
    out after disaster struck and people lost lives.
    political decisions were behind the creation of
    that huge garbage dump which started with two
    acres with approval and ran into seventeen acres
    without approval but under the watchful eyes of
    former and incumbent governments. All this is
    due to corrupt politics , corrupt admin and
    corrupt businesses and corrupt religions . All
    are to blame for corruption because none of
    them unitedly acted with responsibility to
    fight against the social evil . It is the same
    thing that is happening to the Muslims now .
    If you don't act decisively and responsibly
    against every single incident , the trend is
    going to grow without control until another
    Meethotumulla burst !

    ReplyDelete

Powered by Blogger.