Header Ads



பொறுப்புடன் செயற்படுங்கள்

மீதொட்டுமுல்ல திடீர் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்கி, அந்த நடவடிக்கைகளுடன் இணைந்து கொள்ளுமாறு சகல ஊடக நிறுவனங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மூலங்களை மேற்கோள்காட்டி சரியான தகவல்களை மாத்திரம் செய்தியாக வழங்குமாறு ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகேவின் கையெழுத்தில் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புத்தாண்டு வைபவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல ஊடக நிறுவனங்கள் தமது அனுசரணையாளர்களிடம் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய அதில் இருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நடந்துள்ள துயரம் மற்றும் உணர்வுகளை ஆழமாக புரிந்துகொண்டு கூடிய பங்களிப்பை வழங்கி, அனுசரணையாளர்களுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊடகங்களிடம் கோரிக்கை விடுகின்றோம்.

மேலும் இந்த அனர்த்தம் தொடர்பாக செய்திகளை வழங்கும் போது அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் உட்பட அரச நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மூலங்களை மேற்கோள்காட்டி செய்திகளை வெளியிடுமாறும் அமைச்சு கூறியுள்ளது.

மேலும் அனர்த்தம் நடந்த இடத்தில் சேவையாற்றி வருவோருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், குறித்த இடத்தை பார்வையிட செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு ஊடகங்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.