Header Ads



கனடா தனது இதயங்களையும். இல்லங்களையும் திறந்துவைக்க வேண்டும்


அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து தகுதியை பெற்றுக்கொண்ட மலாலா, அவரின் குடியேற்றக் கொள்கையை பெரிதும் பாராட்டினார்.

கனடாவின் கௌரவ குடிமக்கள் தகுதியைப் பெறும் ஆறாவது நபராவார் மலாலா. இதற்கு முன்னர் அத்தகைய தகுதியை பெற்றவர்களில் நெல்சன் மண்டேலாவும், தலாய் லாமாவும் அடங்குவார்கள்.

கனடா நாடாளுமன்றத்தில் மலாலா பேசும்போது, உங்களது வரவேற்பு பொன்மொழி, நிலைப்பாடு - கனடாவிற்கு நல்வரவு- எனும் வாசகம் ஒரு தலைப்புச் செய்தியையோ அல்லது ஒரு டிவிட்டர் ஹேஷ்டேக்கையோ விட உயர்ந்தது.

நீங்கள் தொடர்ந்து உங்களது இதயங்களையும், இல்லங்களையும் உலகின் மிகவும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் திறந்து வையுங்கள் என வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.