Header Ads



'கந்தூரி வைபவங்கள் நடத்த, விதிமுறைகளை அமுல்படுத்த திட்டம்'

-ARA.Fareel-

வாங்­காமம் முஹைதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த புதன்­கி­ழமை மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கந்­தூரி உண­வினை உட்­கொண்ட மூவர் உயி­ரி­ழந்து, நூற்றுக் கணக்­கானோர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பள்­ளி­வா­சல்­களில் நடை­பெறும் கந்­தூரி வைப­வங்கள் தொடர்பில் அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்தி சில விதி­மு­றை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளார்.

முஸ்லிம் விவ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரிகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உட்­பட அதி­கா­ரிகள் கந்­தூரி வைப­வங்­களை நடாத்தும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை­களின் பிர­தி­நி­திகள் ஆகியோர் இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொள்­ள­வுள்­ளனர்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமின் செய­லாளர் எம். எச்.எம். பாஹிம் கருத்துத் தெரி­விக்­கையில், கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொள்ளும் அனைத்து தரப்­பி­ன­ரதும் கருத்­துக்கள் பெற்­றுக்­கொள்­ளப்­படும். குறிப்­பாக தற்­போது கந்­தூரி வைப­வங்­களை நடாத்தும்  பள்­ளி­வா­சல்கள், தரீக்­காக்கள் என்­ப­ன­வற்றின் ஆலோ­ச­னைகள் பெறப்­ப­ட­வுள்­ளன.

எதிர்­கா­லத்தில் கந்­தூ­ரிகளில் பொது­மக்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏற்­ப­டாத வகையில் பாது­காப்­பான உணவு வகை­களை வழங்கும் வகை­யி­லான விதி­மு­றைகள் அமு­லுக்கு கொண்டு வரு­வது தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, வாங்­காமம் முஹைதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் வழங்­கிய கந்­தூரி உணவை உண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த மூவரின் மரணம் குறித்து அமைச்சர் ஹலீம் தனது ஆழ்ந்த கவ­லையை வெளி­யிட்­டுள்ளார்.

உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளையும் தெரி­வித்­துள்ளார். மர­ணத்­திற்கு எவ­ரா­வது கார­ண­மாக இருந்தால் அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் கூறி­யுள்ளார்.

குறிப்பிட்ட கலந்துரையாடல் விடுமுறைகளின் பின்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

9 comments:

  1. முதல்ல கந்தூரிக்கும் இஸ்லாத்திற்கும் பள்ளிவாசல்களுக்கும் என்ன தொடர்பு என்று பாருங்க அமைச்சரே

    ReplyDelete
  2. கௌரவ அமைச்சர் அவர்களே இஸ்லாத்தில் கந்தூரி இல்லை என்பதையும் இது வடி கட்டிய முட்டாள்களின் இணை வைப்பு செயல்,ஆகவே எந்தப் பள்ளியிலும் கந்தூரி கொடுப்பதை தடை செய்யுங்கள்,

    ReplyDelete
  3. Conditions 01: one of the person from Muslim affairs ministry must do a food testing before public eating the food.

    ReplyDelete
  4. இஸ்லாத்தில் கந்தூரி இல்லை என்று சண்டை பிடிக்கும் அறிவாளிகளே, முதலில் சரியான இஸ்லாம் எது என்று மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டாமா? "குர் ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாம்" என்று வந்தார்கள், அவர்களே பல கூறுகளாக பிரிந்து, கடைசியில் யாருக்குமே தெரியாது, எது சரியான இஸ்லாம், எது உண்மையான குர் ஆன் விளக்கம், எது உண்மையான ஹதீஸ் என்று. இப்பொழுது இருப்பதையும் இன்னும் குழப்பி மேலும் பிரிக்க வேண்டாம்.

    ReplyDelete
  5. 12. 'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி

    ReplyDelete
  6. Yahapalanya will create "Ministry of Kanthoori Affairs" in the next reshuffle.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Honourable minister.
    Pls do not take crezy ideas from SLTJ NTJ TNTJ IT LL Blast inside srilanka between sunni and wrong path group of wahhabis.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.