Header Ads



"யானை பார்த்த குருடன் போல" - ஹக்கீம்

வர்த்தமானி அறிவித்தல் மூலம் மக்களின் குடியிருப்புக் காணிகள் வனபரிபால திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட இடமாக பிரகடனப்படும் நிலவரம் காணப்பட்டால், அந்த எல்லைகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஷஅபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணம்| எனும் தலைப்பில் நேற்றிரவு (11) சம்மாந்துறையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது,

விப்பத்து விவகாரத்தில் சிலர் விஷயம் தெரியாமல் விமர்சனங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தை வைத்து தங்களுடைய அரசியல் இலாபத்தை சம்பாதித்துக்கொள்ளலாம் என்பதற்காக எல்லாவற்றிலும் அநியாயம் நடக்கிறது என்பதை சொல்லவராமல், எங்களுடைய நியாயங்களை சொல்லி, நடந்த விடயங்களில் திருத்தங்களை செய்வதிலிருந்து இவர்கள் தவறிழைத்து வருகிறார் என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

வில்பத்து விவகாரம் என்பது என்னவென்று தெரியாமல் சிலர், யானை பார்த்த குருடன் போல பெரிய கூட்டங்களை நடாத்தி, அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வில்பத்து விவகாரத்தில் நடந்த விபரீதங்கள், அவற்றின் பின்னணி என்பவற்றை அறிந்துகொண்டு மிகவும் கவனமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தை கையாள வேண்டியிருக்கிறது.
யார் தவறிழைத்திருந்தாலும் சரி, புலம்பெயர்ந்த மக்கள், குறிப்பாக முசலி மக்கள் வில்பத்து விவகாரத்தினால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிலுள்ள உண்மை நிலவரங்களை நாங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெளிவுபடுத்தியபோது அவர் அதனை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் மக்களின் குடியிருப்புக் காணிகள் வனபரிபால திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட இடமாக பிரகடனப்படும் நிலவரம் காணப்பட்டால், அந்த எல்லைகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்வரும் 27ஆம் திகதி சகல அதிகாரிகளுடன் கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பகுதிக்கு வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வுதருவதாக கூறியிருக்கிறார்.
அதேபோல், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பாராளுமன்றத்தில் வைத்து பேசியிருக்கிறோம். இந்தக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன இந்தக் காணிகளை அபகரித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. நில அளவையாளர்களுடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில் விசாரணை செய்து காணிப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும். இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க உட்படுத்துமாறு வேண்டிக்கொண்;டுள்ளோம். தொகுதிவாரி தேர்தல் முறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளிக்கக்கூடாது என்று நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு வெளியிலுள்ளவர்களை விமர்சனம் செய்வது தலைமையின் கடைமையல்ல. இந்த இயக்கம் பலவீனப்படுத்தப்பட்டால், முழு முஸ்லிம் சமூகமும் பலவீனப்படுத்தப்படும் என்ற அபயாத்தை உணர்ந்தவர்களாக, இந்த இயக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. Flourishing under Ashraff Nama.
    If our leadership is strong y this Vilpattu issue ? M3 knows too well Hakeem's inabilty to stand up against this moves .One by one these crises keep cropping up .where would it lead, Allah alone knows.

    ReplyDelete
  2. Flourishing under Ashraff Nama.
    If our leadership is strong y this Vilpattu issue ? M3 knows too well Hakeem's inabilty to stand up against this moves .One by one these crises keep cropping up .where would it lead, Allah alone knows.

    ReplyDelete
  3. நீங்கள் இக்கட்சியை விட்டு வெளியேறினால் தானாகவே அதுவும் முஸ்லிம் சமூகமும் பலமடைந்துவிடும் என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை?

    ReplyDelete
  4. We didn't see the active involvement in Vilpathu issue by SLMC in the past. We need a proactive role by political parties. Specially by MP's

    ReplyDelete

Powered by Blogger.