Header Ads



ATM இல் கிடந்த ரூ 10 ஆயிரத்தை, வங்கியில் ஒப்படைத்த சாதிக் அலி

கீழக்கரையை சேர்ந்த சீனி முஹம்மது மகன் சாதிக் அலி. இவர் BCA பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்கக்கூடாது என்று கீழக்கரையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் சாதிக் அலி ATM சென்ற போது இயந்திரத்தின் பணம் வரும் பகுதியில் ரூ 10 ஆயிரம் இருப்பதை கண்டார்.

அந்த பணத்தை கையிலெடுத்த சாதிக் அலி யாரேனும் இப்பணத்தை கேட்டு வருகிறார்களா என சற்று நேரம் எதிர் பார்த்தார்.

யாரும் வராததால் அவரது உறவினர் முகைதீன் இப்ராஹீமை தொடர்பு கொண்டு அவரது ஆலோசனையில்பேரில் இன்று -25- வங்கி மேலாளரிடம் ரூ 10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார்.

நம் நாட்டில் பிரியாணியை திருடக்கூடியவர்களும், பிறரின் செல்போன் கடையை உடைத்து திருடக்கூடியவர்களும் இருந்தாலும்...

முஸ்லிம்களுக்கு பிறரின் பொருளாதாரம், பிறரின் மான மரியாதை, பிறரின் உயிர் ஆகிய மூன்றும் மக்காவுக்கு இணையாக, துல்ஹஜ் மாதத்திற்கு இணையாக, துல்ஹஜ்ஜின் பிறை 9 ஆம் நாளுக்கு இணையாக புனிதம் காக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை சகோதரர் சாதிக் அலி நிறைவேற்றி புனிதம் காத்துள்ளார்.

2 comments:

  1. The pity is, among so many thousands of Muslims only one person is acknowledged. Perhaps, if it was a common practice among Muslims, this would not have been a news.

    ReplyDelete
  2. I think these works shouldn't be in news, since the muslim do good deeds only for god not to publish in news webs, also we don't need show ups we are always good as muslims

    ReplyDelete

Powered by Blogger.