Header Ads



A/L பரீட்சையில் 3 A பெற்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுகிறார்கள்

இலங்கையில் உரிய கல்வி முறை இல்லாமையினால் உயர்தரத்தில் 3 ஏ சித்திகளை பெற்ற இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் ஈடுபடுவதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகிய பின்னர் அவர் செல்ல கூடிய தொழில்களுக்கான பயிற்சியை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொழில் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சுதந்திர வர்த்தக மையத்தில் இலட்சத்திற்கும் அதிகமான வெற்றிடங்கள உள்ளன.

நாட்டில் 11 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளது. உயர்தரத்தில் 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு முச்சக்கர வண்டி ஓட்டுவோர் அதிகமானோரும் உள்ளனர்.

சிலர் 3 ஏ சித்திகளை பெற்ற போதும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையினால் முச்சக்கர வண்டி ஓட்டுகின்றனர். இதனால் அரசாங்கம் உரிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.