Header Ads



அடுத்­த­வரின் பணத்­துக்கு ஆசைப்­ப­டாத கான்ஸ்­ட­பி­ளுக்கு 50,000 ரூபா சன்­மானம்

அடுத்­த­வரின் 33,500 ரூபா பணத்­துக்கு ஆசைப்­ப­டாத பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ருக்கு   ஐம்­ப­தா­யிரம் ரூபா சண்­மா­ன­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

DSC_7372புத்­தளம் மற்றும் சிலாபம் பொலிஸ் பிரி­வு­களில் பணி­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு 2017 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்­க­ளுக்­காக  சன்­மானம் வழங்கும் வைப­வத்தின் போதே குறித்த பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளுக்கு இவ்­வாறு சன்­மானம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­த­னவின் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வு சிலாபம் மைக்­குளம் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வர­வேற்பு மண்­டபம் ஒன்றில் இடம்­பெற்­றது.

 இதன்­போது புத்­தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தில் பணி­யாற்றும் பொலிஸ் கான்ஸ்­டபில் எஸ். ஏ. விக்­ர­ம­சிங்க என்­ப­வ­ருக்கே சன்­மானம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் 16 ஆம் திகதி குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கடமை நிறை­வ­டைந்து தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த போது நொச்­சி­யா­கம பிர­தே­சத்தில் வீதியில் தவ­ற­வி­டப்­பட்­டி­ருந்த ஒரு­வரின் பணப்பை பையைக் கண்­டெ­டுத்­துள்ளார்.

அந்த பணப்­பையை சோத­னை­யிட்ட போது அதனுள் 33,500 ரூபா பணம் இருப்­பதைக் கண்டு அதன் உரி­மை­யா­ளரை அதி­லி­ருந்த ஆவ­ணங்­களைக் கொண்டு இனங்­கண்ட குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள், அந்­ந­பரை நொச்­சி­யா­கம பொலிஸ் நிலை­யத்­திற்கு வர­வ­ழைத்து அவ­ரிடம் அவர் தவ­ற­விட்­டி­ருந்த பணப்­பையை ஒப்­ப­டைத்­துள்ளார்.  இவ்­வாறு தனது பணப்­பையை தவற விட்­டவர் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த தனியார் பஸ் வண்­டியின் நடத்­து­ன­ராவார்.

இந்தச் செயலை பாராட்டியே குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் விக்­ர­ம­சிங்­க­வுக்கு இவ்­வாறு ஐம்­ப­தா­யிரம் ரூபா சன்­மானம் பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

No comments

Powered by Blogger.