Header Ads



50 கோடி ரூபா செலவில், டிஜிட்டல் மயமாகும் பரீட்சை திணைக்களம்


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது பற்றித் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார, 

“பரீட்சைகள் திணைக்களத்தை முற்றிலும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக, தற்போதைய திணைக்கள வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஐம்பது கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இக்கட்டடத்தில், வினாத்தாள் தயாரிப்பு, பரீட்சை நடத்துவது, விடைத்தாள் திருத்தம், பெறுபேறு வெளியீடு போன்ற பரீட்சை தொடர்பான சகல நடவடிக்கைகளையும் டிஜிட்டல் முறையில் செய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகளும் குறித்த சகல நடவடிக்கைகளும் நம்பத் தகுந்த முறையில் நடைபெறுவது உறுதிசெய்யப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “கட்டடம் பயன்பாட்டுக்கு வருமிடத்து, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பாடசாலைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. இணையதளம் மூலமே  பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.