Header Ads



காணி அபகரிக்கும் பிரகடனத்தை, இரத்து செய்க - 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதிக்கு மகஜர்

முசலி பிர­தேச செய­லாளர் பிரிவு மக்­களின் பாரம்­ப­ரிய நிலங்­களை மாவில்லு வன ஒதுக்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக் கோரி 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதனை இங்கு தருகின்றோம்.

மன்னார்மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு சொந்­த­மான பெரு­ம­ளவு பாரம்­ப­ரிய நிலங்­களை, வனப் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் 3A பிரிவின் கீழ் மாவில்லு வன ஒதுக்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் அரச வர்த்­த­மானி அறி­வித்தல் இல. 2011/34 இனை மீளாய்ந்து நீக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடம், கீழே கையொப்­ப­மிட்­டுள்ள நாம் வேண்­டுகோள் விடுக்­கிறோம்.

இவ் வர்த்­த­மானி அறி­விப்­பினால் முசலி பிரி­வி­லுள்ள கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, வில்­லாத்­திக்­குளம், பெரிய முறிப்பு, மாவில்லு மற்றும் வெப்பல் உட்­பட பல கிரா­மங்கள் தீவி­ர­மாகப் பாதிக்­கப்­படும். முசலி பிரிவைச் சேர்ந்த மக்­களின் சார்­பாக, அவர்­களின் கருத்து வெளிப்­பாடு மற்றும் நீதிக்­கான உரி­மைக்­க­மை­வாக நாம் இவ் வேண்­டு­கோளை விடுக்­கின்றோம்.

இவ் வர்த்­த­மா­னி­யா­னது காட­ழிப்பு மற்றும் வில்­பத்து வன ஒதுக்கில் இடம்­பெறும் நில ஆக்­கி­ர­மிப்பு என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் வரை­யப்­பட்­டது என்­பதை நாம் புரிந்­து­கொள்­கிறோம். வனப் பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்கு ஒரு­மித்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மெ­னினும், இவ் வர்த்­த­மானி அறி­விப்பும், அதுவரை­யப்­பட்ட முறையும், நில உரிமைக் கோரிக்கைப் பிரச்­சி­னையின் வர­லாற்­றையும், அத­னுடன் தொடர்­பு­டைய மக்­களின் உரி­மை­க­ளையும் கணக்கில் எடுக்கத் தவ­றி­விட்­டன.

1990 இல் முஸ்லிம் மக்கள் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­தையும், போரின் கார­ண­மாக மக்­களிற் பெரும்­பாலானோர் வெளி­யேறி, மீண்டுந் திரும்­பு­வ­தற்­கி­டை­யி­லான 30 வருட இடை­வெ­ளி­யையும் தவிர்த்து நோக்கின், முசலி பிர­தேச மக்கள் (முஸ்­லிம்கள், தமிழர் மற்றும் சிங்­க­ளவர்) இப் பிர­தே­சத்தில் பல தசாப்­தங்­க­ளா­கவோ அல்­லது பல நூறாண்­டு­க­ளா­கவோ வாழ்ந்து வரு­கின்­றனர். இம் மக்­களில் பெரும்­பா­லானோர் நெற் சாகு­படி மற்றும் கால்­நடை வளர்ப்பு என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய நிலஞ் சார் பொரு­ளா­தா­ரத்திற் தங்­கி­யுள்ள விவ­சா­யி­க­ளாவர்.

ஆயினும் சமீ­பத்தில் அறி­விக்­கப்­பட்ட வன எல்­லை­யா­னது, இம் மக்­க­ளுக்குப் ‘பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வனப் பகு­தி­யினுள்’ உள்ள அவர்­களின் குடி­யி­ருப்பு, விவ­சாயம் மற்றும் மேய்ச்சல் நிலங்­களை மறுக்­கின்­றது. மேலும், மக்­களின் சொந்த மற்றும் அவர்­களால் உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும் நிலம் மட்­டு­மல்­லாது, மக்­கட்­தொ­கையின் இயல்­பான வளர்ச்சி மற்றும் வாழ்­வா­தா­ரத்­திற்கு அவ­சி­ய­மான மேல­திக நிலமும் இதனால் இழக்­கப்­படும். 

இவ் வர்த்­த­மானி அறி­விப்­பின்­படி, அண்­ண­ள­வாக 40,030 ஹெக்­டே­ய­ர­ளவு பிர­தேசம்,  விரி­வு­ப­டுத்­தப்­பட்ட மாவில்லு வன ஒதுக்­கினுள் உள்­ள­டக்­கப்­படும். இதனால் வர­லாற்­றினால் இணைக்­கப்­பட்ட முசலி தெற்கு மற்றும் முசலி வடக்குச் சமூ­கங்கள் (இரண்டும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­களை உள்­ள­டக்­கிய சமூ­கங்கள்) ஒன்­றி­லி­ருந்­தொன்று துண்­டிக்­கப்­பட்டு, முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வா­னது இரண்­டாகப் பிள­வு­ப­டுத்­தப்­படும். இதன் கார­ண­மாக ஒன்­றி­லி­ருந்­தொன்று துண்­டிக்­கப்­பட்ட தனித்த மக்கள் கூட்­டங்கள் உரு­வாகும். இது மக்­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தோடு, அவர்­க­ளது அசை­யு­மாற்­றலைக் கட்­டுப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்­கி­டை­யி­லான சமூகப் பரி­மாற்­றங்­களைக் குறைக்கும். மேலும், வன எல்­லை மக்­களின் வீட்டு எல்­லை­க­ளுக்கு மிக அருகில் வரு­வதால், மனி­த – -­வி­லங்கு இடைத்­தாக்கம் அதி­க­ரித்து, ஏற்­க­னவே பாரிய மன­வ­ழுத்தத்தில் உள்ள மக்­களை ஆபத்­துக்­குள்­ளாக்கும்.

முசலி மக்கள் தமது வாழ்வு, இருப்­பிடம், வாழ்­வா­தாரம் மற்றும் சமூ­கங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பப் போராடி வரு­கின்­றனர். மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட உத­வியும், வளங்­களும் அவர்­களின் வாழ்வை இன்னும் கடி­ன­மாக்­கி­ய­தோடு, நிரந்­தர மீள்­கு­டி­யேற்­றத்தில் வீழ்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முசலி தெற்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் 40% ஆனோரே திரும்­பி­வந்­துள்­ளனர். இவ் வர்த்­த­மானி அறி­விப்­பு, எஞ்­சிய 60% மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தின் மீது கடு­மை­யான அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி, இப் பிராந்­தி­யத்தில் சமூக வளர்ச்­சியை மேலும் பின்­ன­டையச் செய்யும். 

முச­லி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்தோர் மற்றும் திரும்­பி­யோரின் நிலை­, ஏனைய இடம்­பெ­யர்ந்தோர் சமூ­கங்­களின் அவல நிலையைப் போல் வருந்­தத்­தக்­க­தா­கவே உள்­ளன. வனப் பாது­காப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் என்­பவற்­றுக்­கி­டை­யி­லான முரண்­பட்ட கூற்­றுக்கள், வில்­பத்து மற்றும் அதன் வடக்கு எல்­லைக்கு மட்டும் தனித்­து­வ­மா­ன­தல்ல என்­பதை நாம் நினைவிற் கொள்­வது முக்­கி­ய­மா­னது.

இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தாலும், இடம்பெயர்ந்து தமது சொந்தவிடங்களுக்குத் திரும்பியவர்களும், இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்களும் தமக்கானவொரு நீடித்து நிற்குந் தீர்வினை இன்னும் அடையவில்லையென்பதே நிதர்சனமாகும். இதை ஒரு வரலாற்றுத் தேவையாகக் கருதி, மார்ச் 2017 இன் அரச வர்த்தமானி அறிவித்தல் 2011/34 இனை உடனடியாக ரத்துச் செய்து, 1992 ஆம் ஆண்டின் பிரதேசச் செயலக வரைபடத்தின்படி முசலி தெற்கு எல்லையை மீள அறிவித்துப் பின் பொது ஆலோசனைக்கிணங்க காட்டு எல்லையை வரையறுப்பதன் மூலம் ஜனாதிபதி முசலி மக்களின் கவலைகளைத் தாமதமின்றி, நியாயமானதொரு முறையில் தீர்க்க வேண்டுமென நாம் கோருகிறோம்.

2 comments:

  1. who are they...Names of 38 Civil Org...??

    ReplyDelete
  2. Why can't they take legal action against My3 & company??
    Please convey this injustice to the world especially to Amnesty International (AI) & Human Rights Watch.
    Amnesty International is doing an outstanding job to bring forth justice to affected people.
    Muslim legal officers and jurists must take nimble actions in this regard.

    ReplyDelete

Powered by Blogger.