April 30, 2017

காங்கேசன்துறையில் 32 மியன்மார் முஸ்லிம்கள் மீட்பு - JMC - I களத்தில் இறங்கி உடனடி உதவி

-மொஹமட் ஜவாமில் + பாருக் சிஹான்-

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் இன்று (30) மீட்கப்பட்டு காங்கேசந்துறைப்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிறுவர்கள் தாய்மார்கள் வயோதிகர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மார்  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  கலவரங்கள் காரணமான   அங்கிருந்து  வேறு நாடுகளுக்கு கடல் வழியாக  செல்வதற்கு வந்ததாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் காங்கேசந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கடலில் இருந்து மீட்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு (jmc-i) சார்பில் அதன் பிரதிநிதி எம்.எம். மொஹமட் ரமீஸ் உலருணவு பொருட்களையும் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கியுள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றும் சிலரும் விரைந்துள்ளதுடன், மியன்மார் முஸ்லிம் சகோதரர்களை சிறைச்சாலையில் தடுத்துவைக்காது, யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.


9 கருத்துரைகள்:

உண்மையிலே இவர்களை பார்க்கும் போதே பாவமாகவும் கவலையாகவும் இருக்கின்றன .இவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அகதி தஞ்சம் இலங்கை அரசாங்கம் கொடுக்குமா என்ற கேள்விக்குறி இருக்கின்றன!

முஸ்லிம் என்ற உடன் மட்டும் ஓடிப்போய் உதவி செய்வதும், காபிர் என்றதும் பராமுகமாக இருப்பதும் ஒருவகை இனவாதமே.

kudukanum in sha allah ella muslim kalum thua seynga and help pannuga

முஸ்லிம்களோ அல்லவோ, தாம் தஞ்சம் கோருவது தமது தந்தை... ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களை இறைவன் பூமியில் இறக்கிய தேசத்தில்தான் என்பதை மறக்காமல் நீதிபதியிடம் ஞாபகப்படுத்தினால் இது சாத்தியம்.

'மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
(அல்குர்ஆன் : 2:35)

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.'
(அல்குர்ஆன் : 2:36)
www.tamililquran.com

தம்பி!...
அது இனவாதமல்ல! தன் சகோதரன் ஒரு முஸ்லிம் என்ற உணர்வு.

அவனுடைய மானம் உயிர் பொருள் அனைத்தும் மக்காவைவிட கஃபா வைவிட அறபா தினத்தை விட புனிதமானது.

நீங்கள் கருத்து கூறுவதை விடுத்து யாருக்கும் உதவலாமே !!!

அப்போ நீங்க அங்கே போய் போரடலாமே,

முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் பெயரை மட்டும் முஸ்லிம் பெயராக இருந்தால் போதாது தானும் முஸ்லிமாக இருக்க வேண்டும்

முதலில் இஸ்லாத்தை பற்றி படித்துவிட்டு பொது இடத்தில் முஸ்லிம் ,இஸ்லாம் பற்றி எழுத வாருங்கள்.

Post a Comment