Header Ads



முஸ்லிம்களின் 2 ஏக்கர் காணியை, விகாரைக்காக சுவீகரிக்கத் தீர்மானம்


ARA.Fareel - விடிவெள்ளி

இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 2 ஏக்கர் காணியை பௌத்த விகாரை நிர்­மா­ணிப்­ப­தற்கு வழங்­கு­வ­தற்கு அம்­பாறை கச்­சே­ரியில் நேற்றுக் நடை­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பன்­ச­லைக்­காக அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்ள முஸ்­லிம்கள் இரு­வ­ருக்குச் சொந்­த­மான காணி­க­ளுக்கு மாற்­றுக்­கா­ணிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. 

அம்­பாறை கச்­சே­ரியில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரின் தலை­மையில் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணி தொடர்­பாக நடை­பெற்ற கூட்­டத்தில் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள், காணி ஆணை­யாளர் மற்றும் உய­ர­தி­கா­ரிகள், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள், பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள், மாணிக்­க­மடு பரி­வார சைத்­திய ராஜ­ம­கா­வி­காரை அதி­பதி அம்­ப­க­ஹ­பிட்­டியே சீல­ரத்ன தேரர், உட்­பட பலர் கலந்து கொண்­டனர். 

'பன்­ச­லைக்­காக சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்ள 2 ஏக்கர் காணியின் சொந்­தக்­கா­ரர்­க­ளான முஸ்­லிம்கள் இரு­வரும் நாளை (இன்று) இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். உதவி காணி ஆணை­யாளர் இவ்விரு­வ­ரு­டனும் காணி தொடர்­பா­கவும் மாற்­றுக்­காணி தொடர்­பா­கவும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­த­வுள்ளார்' என இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். 

அம்­ப­க­ஹ­பிட்­டியே சீல­ரத்ன தேரர்
தீக­வாபி மாணிக்­க­மடு பரி­வார சைத்­திய ரஜ­ம­கா­வி­கா­ரையின் மகா­நா­யக்க அம்­ப­க­ஹ­பிட்­டியே சீல­ரத்ன தேரர் மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணி விவ­கா­ரத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளமை தமக்குக் கிடைத்த வெற்றி எனவும் எதிர்­வரும் மே மாதம் 1 ஆம் திகதி குறிப்பிட்ட காணியில் பூஜை வழிபாடுகள் மற்றும் மத சடங்குகள் நடத்தப்படவுள்ளதாகவும், அரசாங்க அதிபரின் எழுத்துமூல உத்தரவு கிடைத்ததும் விகாரை நிர்மாணப் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். இது பௌத்த நாடு. எமக்குச் சொந்­த­மான காணியில் விகாரை அமைப்­ப­தற்கு எவ­ராலும் எதிர்ப்பு தெரி­விக்க முடி­யாது என்றும் அவர் தெரி­வித்தார். 

பொது­ப­ல­சேனா செய­லாளர் ஞான­சார தேரர்
பொது­ப­ல­சேனா அமைப்பின் ஞான­சார தேரர் 'கிழக்கில் பல இடங்­களில் முஸ்­லிம்கள் தொல்­பொருள் வர­லாற்றுப் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இக்­கா­ணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும். மாயக்­கல்­லியில் நீதி­நி­லை­நாட்­டப்­பட்­டுள்­ளது.' என்று தெரி­வித்­துள்ளார். 

தொல்­பொருள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர்
தொல்­பொருள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் நீல் மல் கொட விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்; தொல்­பொருள் திணைக்­களம் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் தொல்­பொருள் பகு­தி­களை எல்­லை­யிட்டு சுற்­றி­வர வேலி­யிட்­டுள்­ளது. இந்த எல்­லைக்குள் நிர்­மாணப் பணி­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. காணி ஆணை­யா­ள­ரினால் எல்­லை­யிட்டு வழங்­கப்­படும் பகு­தி­யிலே விகாரை நிர்­மா­ணிக்க முடியும் என்றார்.

1 comment:

  1. All dogs are same dogs. Where is justice for the minority?

    Once up on a time Muslims were part and parcel of rulers. That means Muslims made decisions with the rulers. Muslims' ideas were reflected in government policy making mechanism. This was Buddiudin Muhammed's time.


    Then Muslims became king makers. Their some demands were met by the government. Government listen to Muslims and implemented some of their demand. Its Ashrof's time.

    Now, Muslim politician became dogs and looking for bone. Majority ate all the meat and through bones to these dogs. Government pertain to be listening and do not meet any of Muslim demand including their safety and well-being.

    In 5 to 10 years time government will not even pertain to listen Muslim. Buddhist are the law makers, rulers and well to do in everything including money, education. land ownership, business, trading etc.

    Where are we going to end up with????? Let Allah protect us.

    ReplyDelete

Powered by Blogger.