Header Ads



குப்பை மேட்டினால் இதுவரை 26 பேர் பலி - ரணில் அவசரமாக நாடு திரும்புகிறார்


உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்னாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை கருத்திற்கொண்டு பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

வியட்னாம் பிரதமரின் அழைப்பை ஏற்று இன்றைய தினம் அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இராணுவ அணிவகுப்புடன் வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமரின் விஜயம் எதிர்வரும் 19ஆம் திகதி நிறைவடைய இருந்த போதிலும், மீதொட்டமுல்ல அனர்த்தம் காரணமாக பிரதமர் தனது விஜயத்தை நிறைவு செய்யவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக இதுவரையிலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது புது விடயம் குப்பை மண்டையில் விழுந்தது 14ம் திகதி பிரதமர் வியட்னாம் போனது இன்று16ம் திகதி ,அனர்த்தம் காரணமாக அவசரமாக சென்ற பிரயாணத்தை இடையில் முடித்து விட்டு வருகிறாராம்.அப்படி என்றால் அனர்த்தத்துக்கு முதல் அவர் போய் இருக்க வேண்டும்.இன்னும் இந்த இலங்கை மக்களின் தலையில் கொச்சிக்காய் அரைப்பதை இவர்கள் நிறுத்தவில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.