Header Ads



இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி - புதிய மாணவர் அனுமதிப் பரீட்சை – 2017


மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம் மாதம் 26, 27ம் திகதிகளில், காலை 09 : 30 மணிக்கு வளாகத்தில் நடைபெறும்.

**மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காக கல்லூரி செய்துள்ள புதிய ஏற்பாடுகள்
1. G.C.E. (A/L) பரீட்சைக்குத் தோற்றியதன் பின்னார் மாணவர்கள் தாம்  விரும்பும் உயர்கல்வியை சனி, ஞாயிறு தினங்களில் வெளி நிறுவனமொன்றில் தொடர்வதற்கான சலுகை

2. G.C.E. (A/L) COMMERCE  துறையில் தோற்றிய மாணவர்களும் DIPLOMA கற்கை நெறியை முடித்து விட்டு வெளி நிறுவனமொன்றில் உயர்கல்வியை தொடரும் அதேவேளை இஸ்லாஹிய்யாவில் LICENTIATE  கற்கை நெறியைத் தொடர்வதற்கான வாய்ப்பு

3. G.C.E. (A/L) பரீட்சையில் சித்தியடைந்து கல்லூரியில் ஐந்தாம் வருடத்தில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களும் இஸ்லாஹிய்யாவின் LICENTIATE இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு
LICENTIATE COURSE IN ARABIC LANGUAGE AND ISLAMIC STUDIES WITH ARTS STREAM
அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகள்
G.C.E. (O/L) பரீட்சையில் மூன்று பாடங்களில் C தரச்சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட   மொத்தம் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
கணித பாடத்தில் சித்தியில்லாவிடின் 5 பாடங்களில் C தரச் சித்தியடைந்திருத்தல்.
1999/01/01ம் திகதிக்குப்பின்னர் பிறந்திருத்தல்

நேர்முகப்பரீட்சையில் சித்தியடைந்த புதிய மாணவர்கள் மே மாதம் 10ம் திகதி கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

மேலதிக விபரங்களுக்கு 0773171718 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0777345367 எனும் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும் கலாபீடத்தின் ஊடகப் பிரிவு கேட்டுள்ளது.

No comments

Powered by Blogger.