Header Ads



யெமனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும், ஒரு குழந்தை இறக்கிறது..


😂 யெமன் நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை தடுக்கப்படவேண்டிய காரணிகளால் இறப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரத்துறையான OCHA தகவல் தெரிவித்துள்ளது.

யெமன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடைப்படையில் உதவி தேவைப்படுகின்றது. அவர்களின் எண்ணிக்கை 19 மில்லியன் ஆகும்.

இதில் 10 மில்லியன் யெமன் நாட்டின் மக்கள் உடனடி உதவியை எதிர்நோக்கி உள்ளனர். 8 மில்லியன் மக்கள் தொகைக்கும் அதிகமானோர் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். முழுமையான துப்புரவு இன்றி சிரமத்திற்கு உள்ளாவதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

12 மில்லியன் மக்களின் உடனடி தேவையை நிறைவேற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 2.1 பில்லியன் திரட்டுவதற்கு சர்வதேச முறையீடு  செய்ததில் 15 % மட்டுமே உதவி செய்யும் வகையில் நிதியை பெற்றுள்ளது.

OCHA யெமன் நாட்டு மக்களின் மனிதாபிமான அடிப்படையில் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு நிதி திட்டம் நிறைவேற்றும் நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டியர்ஸ் முன்னிலை வகிப்பதாக OCHA செய்திகள் வெளியிட்டு உள்ளது.

-அபூஷேக் முஹம்மத்-

2 comments:

  1. Saudi & other arabions have the moral responsibility to take care about the poverty-stricken Yemeni more than others.
    Saudi officials must allocate billion riyals immediately for the livelihood of these people.

    ReplyDelete
  2. இதற்கு முழுக் காரணமும் சவூதி அரேபியா என்பதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.