Header Ads



10 மில்லியன் செலுத்தினால் யானைக் குட்டி இலவசம் என அரசாங்கம் அறிவிப்பு - சோகமான முடிவு என்கிறார் யானை நிபுணர்

பின்னவல யானைக் காப்பகத்தில் உள்ள இட நெருக்கடி மற்றும் அதனைப் பராமரிப்பதற்கான நிதி நெருக்கடி என்பவற்றைச் சமாளிக்க, குட்டி யானைகளைத் தத்தெடுத்து வளர்பதற்கு இருந்த தடையை நீக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நிபந்தனைகளுக்கு அமைய, தனியாரும் சமய ஸ்தலங்களும் குட்டி யானைகளைத் தத்தெடுக்க அனுமதிக்கும் – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

30 ஏக்கர் நிலத்தில் அமைந்த இந்தக் காப்பகத்தில் 88 யானைகள் உள்ளன. இங்கு, யானை இனப்பெருக்கும் திட்டம் வெற்றிகரமாக உள்ளது.

வளர்ப்பு யானைகளைப் பதிவு செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்டங்களை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.

வளர்ப்பு யானைத் தடையினால் சமய மற்றும் கொண்டாட்ட ஊர்வலங்களுக்கு யானைகள் கிடைக்காமல் போகலாம் என்ற பிரச்சினையும் உள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கோவில்களுக்கு யானைகள் இலவசமான வழங்கப்படும். வளர்ப்புக்காக யானையொன்றைப் பெறுவதானால் 10 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும்.

வயது குறைந்த யானைகளை, பாரம் நகர்த்தப் பயன்படுத்துவது, இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் 7,500 காட்டு யானைகளும் 200 வளர்ப்பு யானைகளும் உள்ளதாக அரசாங்கப் பதிவேடுகளின் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானையொன்றை வளர்ப்பது உயர் அந்தஸ்தின் சின்னதாக இலங்கையில் கருதப்படுகின்றது. அத்துடன், குட்டி யானைகளை யானைக் குடும்பத்திலிருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பும் உள்ளது.

இதேவேளை, ஆசிய யானை நிபுணர் ஜயந்த ஜயவர்த்தன, அரசாங்கத்தின் அரசாங்கத்தின் இந்த முடிவு பொறுப்பற்ற செயல் என்க கூறியுள்ளதுடன், பணத்துக்காக யானைகளை, அரசாங்கம் விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு அன்பளிப்பாக யானைக் குட்டியொன்றைக் கையளிக்க எடுத்த முயற்சி வனவிலங்கு ஆர்வலர்களின் முயற்சியினால் தடுக்கப்பட்டது.

பணக்காரர்கள் சட்டவிரோதமான வளர்த்த யானைகள் பறிமுதல் செய்து, பின்னவலவுக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறான குதிய நடைமுறை காரணமாக யானைகள் மோசமாகப் பாதிக்கப்படுமெனவும் ஜயந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

மேலும், “இந்த யானைகள் திரும்பவும் அவர்களி​டையே கொடுக்கும் தீர்மானத்தால் நாம் கவலையடைந்தோம். இது யானைப் பாதுகாப்புக்கு ஒரு சோகமான தினம்” என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.