Header Ads



வரலாறு முழுவதும் UNP அரசாங்கம், சொத்துக்களை விற்பனை செய்தே வந்துள்ளது - மஹிந்த

இலங்கையில் நீர் மற்றும் மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறு அரசாங்க நிறுவனங்களை உடனடியாக தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கு சமகால அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் சில நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட மஹிந்த, நாட்டின் தேசிய வளங்களை இவ்வாறு விற்பனை செய்வது தேசிய குற்றமாகும் என கூறியுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய நிறுவனங்களே இவ்வாறு விற்பனை செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க சொத்துக்களை இவ்வாறு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாறு முழுவதும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்வதாகவும், இன்று சர்வதேச நாணய நிதியத்திற்கு அவசியமான முறையில் நாட்டில் செயற்படுவதற்கு ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

3 comments:

  1. UNP sold the properties
    You stole the properties
    Not much of a difference is it ?

    ReplyDelete
  2. Mahinda is not a socialist ! Ranil is not a capitalist !
    So , where are you two going ? COCONUT IN THE BAG !
    MALLEY POL IN SINHALA ! How can you two achieve anything
    by lying to the people through the roof ? You two are
    destroying the country by trying to COPY SINGAPORE OR
    ANY OTHER DEVEOPED WORLD WITH SOMEBODY ELSE'S MONEY ?
    It might temporarily look like development for poor
    gallery folks but it is DESTRUCTIVE DEVELOPMENT AND
    NOT REAL . There are ways to develop our country
    without going into HUGE AND ENDLESS DEPT TRAPS !
    BOTH OF YOU are not leaders taking the people in
    right directions but importers ,promotors and
    marketers of FALSE DEVELOPMENT to the country with
    borrowed world funds . REMEMBER ONE MOST IMPORTANT
    THING IN LFE . "LUXURY MUST BE EARNED AND NOT BE
    BORROWED."

    ReplyDelete
  3. Please read it as DEBT and not DEPT ,sorry for the
    error .

    ReplyDelete

Powered by Blogger.